கப்பலில் இருந்து நிலப்பரப்பு சென்று தாக்கும் ஏவுகணை: சோதனைக்கு தயார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

கப்பலில் இருந்து நிலப்பரப்பு சென்று தாக்கும் ஏவுகணை: சோதனைக்கு தயார்

புவனேஷ்வர், அக்.5 இந்திய பாது காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அய்.டி.சி.எம் என்ற ஏவு கணையை உருவாக்கியுள்ளது. கப்பலில் இருந்து விண்ணில் வீசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை ஏவுகணை நீண்டதூரம் பய ணித்து நிலப்பரப்பில் சென்று தாக்க கூடியது. இந்த ஏவுகணை முற்றிலும் உள்ளநாட்டு தயாரிப்பில் உருவானது. இது குறித்து டி.ஆர்.டி. செய்திக் குறிப்பில், ‘நீண்டதூரம் சென்று தாக்க கூடிய முதல் கப்பல் ஏவுகணை அய்.டி.சி.எம். கடந்த ஆகஸ்ட் மாதம் இது சோதனை செய்யப்பட்டது. ஆனால் சில சிக்கல் காரணமாக சிக்னல்கள் கிடைக்கவில்லை. தற் போது சீரமைக்கப்பட்டு தயாராக உள்ளது. ஒடிசாவில் உள்ள கடற் கரையில் இருந்து அக்.6 அல்லது 8ஆம் தேதி ஏவுகணை சோதனை திட்ட மிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment