தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு சிங்கப்பூர் அரசு மனிதநேய விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு சிங்கப்பூர் அரசு மனிதநேய விருது

துபாய், அக். 14- சிங்கப்பூரில் ஆண்டுதோறும்  மத நல் லிணக்கம், இளைஞர்க ளுக்கு விழிப்புணர்வு மற் றும் பல்வேறு தன்னார் வப் பணிகளில் ஈடுபடுப வர்களுக்கு அதிபரால் விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டும் அதற்கான விருதுகள் அறிவிக்கப் பட்டு தனி நபர்கள் மற் றும் அமைப்புகள் உள் ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த நஷ்ஹத் பஹீமா என்ற பெண் ணுக்கு சிறந்த மனித நேய பணிக்கான விருது வழங் கப்பட்டுள்ளது.

அதிபர் மாளிகை இஸ்தானாவில் நடை பெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அதிபர் ஹலீமா யாகூப் விருது  வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி  தேசிய தன்னார்வ மற்றும் தொண்டு மய்யத் தால் ஏற்பாடு செய்யப்பட் டது. இது குறித்து விருது பெற்றபஹீமா கூறியதா வது, ‘விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கி றது. இன, மத வேறுபாட்டை களைந்து அனைத்து மக்களிடம் நல்லிணக்கம் தொடர்ந்து நிலைத்திட பணியாற்றுவேன்என தெரிவித்தார்.

No comments:

Post a Comment