ரோம்,
அக். 14- இத்தாலி நடத்திய ஜி-20 நாடுகள் கூட்டத்தில் ஆப்கானிஸ் தான் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஜி-20 நாடுகள் கூட் டத்தை இத்தாலி டிஜிட் டல் முறையில் நடத்தியது.தலீபான்களின் ஆட்சி நடைபெறும் ஆப்கானிஸ் தானில் நிதி நிலைத்தன் மையை தக்க வைக்க ஜி-20 நாடுகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில்
பொருளாதார மற்றும் நிதி அமைப்புகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அது ஆப்கான் தேசத்து மக்கள்
மீது பெரும் சுமையாய் விழும் என்று தெரிவிக் கப்பட்டது. மேலும், அந்நாட்டின் சம நிலைமைக்கு இது
குந்த கம் விளைவிக்கும் என் றும் தெரிவிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான்
விவகாரத்தில் அய்.நா.சபை மிக
முக்கிய பங் காற்றும். எனவே அந் நாட்டில் அய்.நா.சபை தொடர்ந்து
நீடிக்க வேண்டும் என்றும் ஆப்கனில் அய்.நா. சபை பணியாளர்கள் மற்றும் மனிதநேய பணியாளர் களுக்கு முழுமையான, பாதுகாப்பான, தங்கு தடையற்ற உரிமைகள் பாலின வேறுபாடின்றி வழங்கப்பட
வேண்டும் என்றும் அந்த கூட்டத் தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும்
ஆப்கன் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் அகதி
களாக செல்லாமல் இருக் கவும், மனிதாபிமான பேரழிவைத் தடுக்கவும், மனிதநேய செயல்பாட் டாளர்களின் சேவை அங்கு கட்டாயம் தேவை என்கிற நிலை உருவாகி யுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment