பியாங்யாங்,
அக். 14- அணு ஆயுத விவகாரத்தில் வட கொரியா மற்றும்
அமெ ரிக்கா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த பதற்றத் துக்கு மத்தியில் அண்மை காலமாக வடகொரியா தனது ராணுவத் திறனை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரே மாதத்தில் 4 புதிய ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அண்டை நாடுகளை அதிர வைத்தது.
இந்த
நிலையில் தனது ராணுவபலத்தை உலகுக்கு காட்டும் வகை யில் மிகவும் அரிதான ஆயுத கண்காட்சியை வடகொரியா நடத்தியது. தலைநகர் பியாங்யாங்கில் 11.10.2021 அன்று நடந்த இந்த கண்காட்சியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுக ணைகள் உள்பட பல முக்கியமான ராணுவத்
தளவாடங்கள் காட்சி ப்படுத்தப்பட்டன.
இந்த
கண்காட்சியில் உரையாற்றிய அந்த நாட் டின் தலைவர் கிம் ஜாங் அன் ‘‘அமெரிக்காவின் விரோதப்போக்கு மற்றும் அழுத்தத்தை சமாளிக்க வடகொரியாவின் ராணு வம் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்கப்படும்’’ என சூளுரைத்தார்.
No comments:
Post a Comment