காத்மண்டு,
அக். 14- நேபாளத் தின் லும்பினி மாகாணம் பேங்கி மாவட்டத்தில் இருந்து முகு மாவட்டத் திற்கு 45 பயணிகளுடன் முகு மாவட்டத்திற்கு 12.10.2021 அன்று பேருந்து சென் று கொண்டிருந்தது.
மலைப்பாங்கான
பகுதியில் சென்றுகொண் டிருந்தபோது பேருந்தின் முன் டையர் திடீரென ’பஞ்சர்’ ஆனது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத் தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.
இந்த
கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 28 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயி ரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த பயணி களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர். பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் தசாரா பண்டிக்கைக்காக சொந்த ஊர் சென்று கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment