கூடுதல் கட்டணம் வசூலித்தால் இ-சேவை மய்ய உரிமம் ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 4, 2021

கூடுதல் கட்டணம் வசூலித்தால் இ-சேவை மய்ய உரிமம் ரத்து

தூத்துக்குடி, அக்.4- தூத்துக்குடி மாவட்டத்தில் -சேவை மய்யங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என  மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து ஆட்சியர்  வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும், பல தனியார் கணினி மய்யங்களில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக மட்டும் உரு வாக்கப்பட்ட - சேவை மய்யங்களில் 20 வகையான வரு வாய்த் துறை சான் றிதழ்களும், 6 வகையான முதியோர் உத வித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் விண் ணப்பிக்கப் பட்டு வருகின்றன.  அவ்வாறு விண் ணப்பிக்கும் சான்றிதழ்களில் எழுத்துப் பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல், இடைத்தரகர்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அரசு பொது -_சேவை மய்யங்களில் வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கான விண்ணப் பங்கள் பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட் டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு 

ரூ.10-ம், சமூகநலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவித் திட்டங்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான விண் ணப்பங்கள் பதிவேற்றம் செய்வ தற்கு மனு ஒன்றுக்கு ரூ.120-ம், இணைய வழி பட்டா மாறு தல்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வ தற்கு மனு ஒன்றுக்கு ரூ.60-ம் சேவைக் கட்டணமாக அரசினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

_-சேவை மய்யம் நடத்துவ தற்கான அரசு உரிமம் பெற்றுள்ள தனியார் கணினி மய்யங்களில் நிர்ணயிக்கப் பட்ட சேவை கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வது தெரிய வந்தால், அந்த மய்யங்களின் பொது -_சேவை மய்ய உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். சான்றிதழ்கள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட் டணத்தை விட  அதிக வசூல் செய்வது தொடர்பான புகார்களை மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 18004251333 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் மூலமோ தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment