மோடி அரசின் செயல்களை கண்டு அமைதியாக இருப்பது சரியல்ல : கபில்சிபல் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 4, 2021

மோடி அரசின் செயல்களை கண்டு அமைதியாக இருப்பது சரியல்ல : கபில்சிபல் பேட்டி

ஆமதாபாத், அக்.4 மோடி அரசின் செயல்களை கண்டு அமைதியாக இருப்பது சரியா காது என்று காங்கிரஸ் தலைவர் களில் ஒருவரான கபில் சிபல் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தலை மைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள 23 தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், ஆமதா பாத்தில்  2.10.2021 அன்று செய் தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது பல்வேறு கேள் விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

நாம் கட்சி அமைப்புகளில் அர்த்தமுள்ள பேச்சு வார்த்தை களை தொடங்காவிட்டால், நான் உதவியற்றது போல உணர் கிறேன் என மேனாள் அமைச்சர் .சிதம்பரம் சுட்டுரையில் கூறி இருப்பது பற்றி கேட்கிறீர்கள்.

இதில் நான் கருத்து கூறுவ தற்கு இல்லை. அவர் எனது அன்புக்குரிய சகா.


அரசியலைப்
பொறுத்த மட்டில், நான் மோடி (அரசு) பற்றி பேசுகிறபோது, அமை தியாக இருப்பது சரியாகாது. இது அமைதியாக இருக்க வேண் டிய தருணம் ஆகாது. மோடி அரசின் கொடுமைகள் குறித்து நீங்கள் அமைதியாக இருக்கி றீர்கள் என்றால், நீங்கள் அதற்கு துணை போகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

ஜி-23 என்று நீங்கள் அழைக் கிறீர்கள். நீங்கள் அவ்வாறு அழைத்தாலும் ஜி-23 என்று ஒன்று இல்லை. காங்கிரசில் சீர் திருத்தங்களை விரும்புகிற ஒரு தரப்பினர். அவ்வளவுதான். நாங்கள் விரும்பும் சீர்திருத்தம் பற்றி பேசி இருக்கிறோம். அதை திரும்பக்கூறுவதில் எந்த அர்த் தமும் இல்லை.

கட்சிக்கு எதிராக எனக்கு குறைகள் இல்லை. நான் சொன்ன தெல்லாம், சொன்னதுதான். அதற்கு மேலும் எதுவும் கூற நான் விரும்பவில்லை.

சீர்திருத்தங்கள் செய்வதற்கு கட்சி தயாரா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. நான் என் உணர்வுகளைத்தான் தெரிவிக்க முடியும்.

மோடி அரசின் கொடுமை களை எதிர்த்து கட்சி வலுவான நிலைப்பாடு எடுத்திருப்பதாக உணர்கிறீர்களா என கேட் கிறீர்கள். கட்சி அதைப்பற்றி பேசி இருக்கிறது. அதற்கு எதி ராக ராகுல் காந்தி குரல் கொடுத் திருக்கிறார். அது ராகுல் காந்தி செய்த நல்ல செயல்.

காங்கிரஸ் நடுநிலையை விட்டு விட்டு பா... மற்றும் இடதுபக்கம் திரும்பி விட்டதா என்கிறீர்கள். இல்லை. பா... விளையாட்டின் விதிகளை மாற்றி விட்டது. கிரிக்கெட்டென் றால் அது விதிகளை வைத்து விளையாடுகிற விளையாட்டு. எல்.பி. டபிள்யு அல்லது கேட்ச் சில் சந்தேகம் என்றால் 3-ஆவது நடுவர் முடிவுக்கு விடப்படுகிறது. ஆனால் இங்கே அவர்களே எல்லா அமைப்புகளையும்   எடுத் துக் கொண்டனர். அவர்களே நடுவர்கள் ஆகி விட்டிருக்கி றார்கள்.

அமலாக்கப்பிரிவு இயக்குந ரகம் ஒரு நடுவர். சி.பி.அய். ஒரு நடுவர். அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் செல்வாக்கை காட்ட முயற்சிக்கிறார்கள். அவர்கள் அரசு அமைப்பை கைப்பற்றி விட்டனர்.

பஞ்சாப் காங்கிரஸ் குழப்பம் பற்றி கேட்டால், நான் கட்சித் தொண்டர். நான் முடிவு எடுக்கிற இடத்தில் இருந்தால் தான் கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment