பாடத் திட்டம்: கேரளா வழிகாட்டுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 4, 2021

பாடத் திட்டம்: கேரளா வழிகாட்டுகிறது

கேரளப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தரான பிரபாஷ் தலைமையில் இரு நபர் கொண்ட குழு பரிந்துரையின் அடிப்படையில் திருத்தப்பட்ட பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு  வெளியிடப்பட்டது. திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சிந்தனையாளர்கள் வெவ்வேறு சித்தாந்தங்களை ஆதரிப்பது, அரசியல் துறையின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது.இந்தப் புதிய திருத்தப்பட்ட பாடத்திட்டம் மாணவர்களுக்கு மூன்றாவது செமஸ்டரில் கற்பிக்கப் படவுள்ளது.

பாடத்திட்டத்தில் வலதுசாரி சிந்தனைவாதிகளான சாவர்க்கர், கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரின் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாணவர் அமைப்பு (ரிஷிஹி), கேரள இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு (விஷிதி) ஆகியவை போராட்டத் தில் ஈடுபட்டன. பாடத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கே.எஸ்.யூ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரனிடமிருந்து விளக்கத்தை அம்மாநில கல்வி அமைச்சர் ஆர்.பிந்து கோரியுள்ளார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக செய்தி யாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் "சுதந்திர போராட்டத்தை புறக்கணித்த எந்த சித்தாந்தத்தையும் தலைவர்களையும் பெருமைப்படுத்த மாட்டோம் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். யாரும் அதை செய்ய மாட்டார்கள்."

"சில நேரங்களில், பிற்போக்கு சித்தாந்தங்களை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால் அத்தகைய சித்தாந்தங்களையும் அந்த கருத்துக்களை நிலைநிறுத்திய தலைவர்களையும் யாரும் புகழக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய இரண்டு நபர் குழுவை  பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. அவர்களின் பரிந்துரைப்படி பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்என்று தெரிவித்துள்ளார்.

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் அண்மையில் முதுகலை எம்.., பட்டப் படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத் திட்டம் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டது.  அதன்படி, முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்புகளில் இடம் பெற்றிருந்த சங்பரிவார், தீன் தயாள் உபாத்யாயா, பால்ராஜ் மதோ உள்ளிட்டோர் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. 

 அதன் பிறகு பல்கலைக்கழகம் அமைத்த இரண்டு நபர் குழுவின் பரிந்துரையின் படி தந்தை பெரியார் - திராவிட தேசியம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

இது வரவேற்கத்தக்கதாகும். இந்த வகையில் கேரள முதல் அமைச்சர் - கேரள இடதுசாரி அரசு இந்தியாவுக்கே வழிகாட்டியுள்ளது. சங்பரிவார் பற்றி விரிவாக பாடத் திட்டங்களில் இடம் பெற்றிருந்ததை மாணவர்கள் கிளர்ச்சியின் சார்பாக நீக்கியது சிறப்பானது.

அதே நேரத்தில் இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க முதல் மனித உரிமை சுதந்திரப் போராட்டத்தை வைக்கத்தில் நடத்தி வெற்றி கண்ட தந்தை பெரியார் குறித்தும் 1921ஆம் ஆண்டிலேயே சமூகநீதித் திசையில் வகுப்புவாரி உரிமை ஆணையை (சிஷீனீனீuஸீணீறீ நி.ளி.) பிறப்பித்ததும் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தை உருவாக்கியதுமான நீதிக்கட்சி உள்ளிட்ட திராவிட இயக்கம் குறித்தும் பாடத் திட்டங் களில் இடம் பெறச் செய்தது மிகவும் பாராட்டுக்குரியது.

சென்னைப் பல்கலைக் கழகத்திலும் சமூகநீதி பாடத் திட்டம் இடம் பெறச் செய்ய முடிவு எடுத்திருப்பதும் சாலச் சிறந்ததும் - மாணவர்களை நல் வழியில் ஆற்றுப் படுத்துவதுமாகும்.

பாராட்டுகள் - வாழ்த்துகள்!

No comments:

Post a Comment