உணவுப் பங்கீட்டு கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைந்து பொருட்கள் வழங்க உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

உணவுப் பங்கீட்டு கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைந்து பொருட்கள் வழங்க உத்தரவு

சென்னை, அக். 11- நியாய விலைக் கடைகளில்  முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கு  உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உணவுத்துறை உத்தரவிட் டுள்ளது.குடும்ப அட்டைதா ரர்கள் சிரம மின்றி உணவு பொருட்களை பெறுவ தற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர அட்டை தாரர்கள் நியாயவிலைக்கடைகளுக்கு வரும் போது கனிவுடன் குடும்ப அட்டையை ஸ்கேன் செய்து விரல் ரேகையை சரிபார்க்க வேண்டும். விரல் ரேகை சரியாக உள்ள அட்டை தாரர்களுக்கு உடனடியாக பொருட்கள் வழங்க வேண்டும்.

விரல் ரேகை தெளிவில்லாமல் பதிப்பு முறை தோல்வி அடையும் பட்சத்திலும், தடையின்றி விநியோகம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு பதில் அங்கீகரிக்கப் பட்ட நபர் பொருட்கள் பெற  வந்தால் உட னடியாக பொருட் களை விநியோகம் செய்ய வேண்டும். தொழில்நுட்பக் கோளாறு  காரணமாக அரை மணி நேரத்திற்கு மேல் ஆதார் இணைப்பு பெற  முடியாத சூழலில், பிற வழிமுறை களை கடைப்பிடித்து பொருட்களை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் உணவுத் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment