பெரியார் அன்பர்களைத் தினமணி எப்போது திக்குமுக்காடச் செய்யும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

பெரியார் அன்பர்களைத் தினமணி எப்போது திக்குமுக்காடச் செய்யும்?

கடந்த செப் 11ஆம் நாள் வெளிவந்த தினமணியில்பாரதி வழியில் தினமணிஎன்ற தலையங்கத்தில்பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி முதல மைச்சர் மு..ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 14 அறிவிப்புகளை வெளி யிட்டுப் பாரதி அன்பர்களைத் திக்குமுக் காடச் செய்திருக்கிறதுஎன்று எழுதப்பட் டிருக்கிறது. அதே தலையங்கம் பக்கத்தில் பாரதியார் பற்றி நீண்ட கட்டுரை ஒன்றும் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல, பாரதியார் பற்றிய பல்வேறு செய்திகள் இணைப்பிதழிலும் (Supplementary)  வெளியாகி உள்ளது.

செப் 15, அறிஞர் அண்ணா பிறந்த நாளில் தினமணியில் இணைப்பிதழ் (Supplementary)  இல்லை. அறிஞர் அண்ணா பற்றி ஒரே ஒரு சின்னக் கட்டுரை போனால் போகட்டும் என்று...

செப் 17 அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாளில் தினமணியில் இணைப்பிதழ் (Supplementary)  இல்லை. ஏன் ஒரு கட்டுரை கூட இல்லை. மாறாக சமூக நீதி காவலர் நரேந்திர மோடி தான் என்றொரு கட்டுரை அர்ஜூன் சம்பத் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அதில் அர்ஜூன் சம்பத் பெரியார் என்ன பண்ணிக் கிழித் தார் என்னும் ரீதியில் வசை பாடியுள்ளார். அது அவர்களின் பிறவிப் புத்தி. அப்படித் தான் எழுதுவார்கள். இருந்தாலும் தின மணி வைத்தியநாத அய்யருக்கு ஒரு கேள்வி!

முதலமைச்சர் மு..ஸ்டாலின் செப் 11ஆம் நாளை மகா கவி நாளாகக் கடைப்பிடிக் கப்படும் என்ற அறிவிப்பு பாரதி அன்பர் களைத் திக்குமுக்காடாகச் செய்துள்ளது என்றெழுதியவர்...

செப் 17 அன்று அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாளில் அவரைப் பற்றிய செய்திகளை வைத்தியநாத அய்யர் வெளியிட்டுப் பெரியார் அன்பர்களைத் திக்குமுக்காடச் செய்திருக்க வேண்டாமா?

ஏன் செய்யவில்லை? எப்போது தின மணி இதைச் செய்யும்? திக்குமுக்காடச் செய்வது ஒரு வழிப் பாதையா என்ன?

- ‘பெரியாரொலி

No comments:

Post a Comment