பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி

மதுரை, அக். 12- பள்ளி மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் முன்னணி பகுத்தறிவு தளமான HCL Jigsaw  நிறுவனம் இரண்டாவது முறையாக மாணவர்களின் புதிர் தீர்க்கும் திறனை மதிப்பிடும் வகையில் போட்டியை நடத்துகிறது.

இந்திய அளவில் நடக்கும் இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் கேட்ஜட்டுகள் வழங்கப்படவுள்ளன என எச்.சி.எல். கார்ப்பரேஷனின் மூலோபாயத் தலைவர் சுந்தர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டாம் பதிப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் அல்லது பள்ளிகள், வரும் நவம்பர் 26ஆம் தேதிக்குள் www.hcljigsaw.com என்ற இணையதளப் பக்கத்தில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment