அறிவுறுத்தல்
விழாக் காலங்கள் அடுத்தடுத்து வருவதால் மக்கள் முகக்கவசம் மற்றும் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றிட வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
நிதி ஒதுக்கல்
மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் மோதலில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ரூ. 6 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
மறுவாக்குப் பதிவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற மறுவாக்கு பதிவில் 19.30 சதவிகித வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகள்
இந்தியாவில் இதுவரை மொத்தம் 95.82 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனுமதி
‘ஹெட்டெரோ’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 40 லட்சம் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவுக்கு எற்றுமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
குறைந்தது
இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரே நாள் பாதிப்பு 18,132 பேராக குறைந்தது. 193 பேர் இறந்துள்ளனர்.
அபாய எச்சரிக்கை
திருவள்ளூர் - பூண்டி ஏரியிலிருந்து மேலும் 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆறு வழித்தடத்தில் உள்ள 29 கிராமங்களைச் சேர்ந்தோருக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment