ஒன்றிய அமைச்சரின் விபரீதப் பேச்சு
புதுடில்லி, அக்.12 ஒன்றிய இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி பெட்ரோல் விலை உயர்த்தியதால் தான் மக்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி போட முடிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் கரோனா தாக்கம் குறைந்த போதிலும் விரைவில் மூன்றாம் அலை கரோனா பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. இதனால் நாடெங்கும் கரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு இந்த தடுப்பூசி மருந்துகளை மொத்தமாகக் கொள் முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை தாறு மாறாக உயர்ந்து புது உச்சங்களை எட்டி வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102 அய் நெருங்கி உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் பெரும் துன்பம் அடைந்துள்ளனர்.
சமூக ஊடகங் களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒன்றிய பெட் ரோல் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ராமேஸ் வர் தெலி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர், அரசு நிதி ஆதாரங்களைத் திரட்டு வதில் பெட்ரோல் விலை உயர்வு முக்கிய அங்கம் வகிக்கிறது.
இமயமலை தண்ணீர் பாட்டி லின் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக உள்ளது.
மேலும் பெட்ரோல் விலையை உயர்த்திய தால் தான் பொது மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போட முடிந்தது எனக் கூறி உள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு நாட்டில் கடும் சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment