நூல்:"கதை சொல்வதே பெரிய கதை"
ஆசிரியர்:மு.கலைவாணன்
பக்கங்கள்: 144
விலை : 150/-
வெளியீடு:
கூத்தர்குடில்,
89, செல்லியம்மன் கோயில்தெரு,
காட்டாங்குளத்தூர்,
செங்கல்பட்டு மாவட்டம் - 603 703
“சிறந்த தன்னம்பிக்கை வளர்க்கும் பேச்சாளராய், எழுத்தாளராய், பொம்மலாட்ட கலைஞராய் திகழும் பல்கலைச் செல்வர் மு.கலைவாணன் அவர்கள் குழந்தைகள் செயல்பாட்டாளர்.
பெரியார் பிஞ்சு ஏட்டில் தொடர்ந்து சிறுகதைகளை எழுதிவருபவர்.கதை சொல்வதில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அந்த அனுபவங்கள் கற்றுத்தந்த பாடங்கைளை யும் தொகுத்து இந்த நூலை எழுதியுள்ளார்."
கதை சொல்லுதல் என்னும் கலை குழந்தைகளுக்கு இந்த உலகத்தை இயற்கையை கற்பிப்பதிலும், நல்ல பண்பு எது? தீய பண்பு எது என்று கற்பிப்பதிலும், படிக்கும் பருவத்தினரை நல்வழிப்படுத்துவதிலும், முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை எளிமையாய், தெளிவாய் எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர்.
கதையின் கதை, பழைய கதை, மாற்றும் கதை, பக்திக் கதை, மேடைகளில் கதை, பகுத்தறிவுக் கதை, பேச்சிலும் எழுத்திலும் கதை, சீனக் கதை, கலை வடிவத்தில் கதை, கதை சொன்னவரின் கதை, தேட வேண்டிய கதை, கேலிச்சித்திரக் கதை, கதை எழுதியவரின் கதை, படித்தக் கதை, நீதிக்கதை, சொல்லவேண்டிய கதை, மாற்றம் செய்த கதை, பேசாதன பேசும் கதை, தேடி வந்த கதை, கேட்ட கதை, எழுதியக் கதை, மதிப்பை உயர்த்தும் கதை, பாதிக் கதை, வரலாற்றுக் கதை, கிடைத்த கதை, மந்திரத் தந்திரக் கதை, சிலையின் கதை, கதை சொல்லும் கலை, கதை விளையாட்டு என 30க்கு மேற்பட்ட தலைப்புகளில் ஏரமாளன செய்திகளை எழுதியுள்ளார்.
ஒவ்வொரு தலைப்பும் சுவையான எடுத்துகாட்டுகளுடன் ஒரு கட்டுரையாக விரித்து எழுதத்தக்க வகையில் ஆழமான சிந்தனைகளைக் கொண்டவை...
பெற்றோரும், ஆசிரியர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
No comments:
Post a Comment