பதக்கங்களை பெற்ற விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகளை சிறப்பித்தார் முதலமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

பதக்கங்களை பெற்ற விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகளை சிறப்பித்தார் முதலமைச்சர்

 தமிழ்நாடு முதலமைச்சர்   மு.. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.10.2021) தலைமைச் செயலகத்தில், பாராலிம்பிக் போட்டிகள், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வென்ற 15 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஊக்கத் தொகையாக மொத்தம் 3 கோடியே 98 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வின் போது,  சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  சிவ. வீ.மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர் உறுப்பினர் செயலர் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment