9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் : 74 சதவீதம் வாக்குப்பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் : 74 சதவீதம் வாக்குப்பதிவு

சென்னை, அக்.7 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று (6.10.2021) அமைதியாக நடைபெற்றது. 74.37 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள் ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள் ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேர்தல் பணிகள்

அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட் டங்களில் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன.

இந்த தேர்தலில் 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் போட்டியிட 98 ஆயிரத்து 151 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனைக்குப் பின்பு ஆயிரத்து 166 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14 ஆயிரத்து 571 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர்.

இதைத்தொடர்ந்து 2 ஆயிரத்து 981 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல்கட்ட தேர்தல்

இதன் காரணமாக 9 மாவட்டங் களில் 23 ஆயிரத்து 998 பதவி இடங் களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய் யப்பட்டது. இந்த போட்டியில் 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் இருந்தனர்.

இந்த 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 78 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், ஆயிரத்து 577 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தம் 14 ஆயிரத்து 662 இடங்களுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

 முதல்கட்ட வாக்குப்பதிவு 7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக் குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் போன்ற பதவி களுக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டதால் வாக்குப்பதிவு நடந்த பகுதிகள் திருவிழா போன்று களைகட்டியது.

மாவட்ட ஊராட்சி வார்டு கவுன் சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சி ரீதியாக போட்டி என்பதால் தி.மு.., .தி.மு.. உள்ளிட்ட கட்சியினரும் பம்பரமாக சுழன்று சம்பந்தப்பட்ட பகுதிகளின் வாக்காளர் களை வாக்களிக்க செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

மாலை 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் காரண மாக சில இடங்களில் இரவு 7 மணிக்கு பிறகும் வாக்குப்பதிவு நடந்தது. ஒருசில இடங்களில் நடைபெற்ற வாக்குவாதங் களை தவிர்த்து வாக்குப்பதிவு அமைதி யாகவும், விறுவிறுப்பாகவும் நடை பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குச்சீட்டு முறை என்பதாலும், சில இடங்களில் வாக்குப்பதிவு இரவு நீண்டநேரம் வரை நீடித்ததாலும் வாக்குப்பதிவு சதவீதத்தை கணக்கிடு வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதல்கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக் களிக்க வேண்டும். 74.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் நேற்று இரவு அறிவித்தது.

கண்காணிப்பு

வாக்குப்பதிவை கண்காணிக்க ஆயி ரத்து 123 வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்டீரிமிங் கேமரா பொருத்தப்பட்டிருந் தது. ஆயிரத்து 135 வாக்குச்சாவடிகளில் ஓட்டு போடுவது வீடியோ பதிவு செய் யப்பட்டது. 12 ஆயிரத்து 318 வாக்குச் சாவடிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஓட்டுபோட அனுமதிக்கப்பட்டனர்.

2-ஆம் கட்ட தேர்தல் நாளை மறுநாள்  நடக்கிறது. இதைத்தொடர்ந்து 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

No comments:

Post a Comment