அய்.நா. எச்சரிக்கை
நியூயார்க்,அக்.7- உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் பேராசிரியர் பெட்டேரி தலாஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:-
பருவநிலை மாற்றம், பெருவெள்ளம் மற்றும் வறட்சி போன்ற நீர் தொடர்பான ஆபத்துகளின் உலகளாவிய அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் உயரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
2018-ஆம் ஆண்டில் இருந்து 360 கோடி மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்தார்கள். 2050-ஆம் ஆண்டுக்குள் 500 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறை சிக்கலை எதிர் கொள்வார்கள்.
எனவே கூட்டுறவு நீர் மேலாண்மை, ஒருங்கி ணைந்த நீர், நிலையான வளர்ச்சி, பருவநிலை மாற்றக் கொள்கைகளை கடைபிடித்தல் மற்றும் பேரிடர் அபாய குறைப்பு ஆகியவை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். அதிகரித்து வரும் வெப்பநிலை உலகளாவிய மற்றும் பிராந்திய மழைப்பொழிவு மாற்றங்களை விளைவிக்கிறது, இது மழை வடிவங்கள் மற்றும் விவசாய பருவங்களில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது, உணவு பாதுகாப்பு, மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் நிலத்தின் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பு, மண்ணின் ஈரப்பதம், பனி உறைதல் உட்பட அனைத்து நீரின் தொகுப்பும் ஆண்டுக்கு 1 செமீ என்ற விகிதத்தில் குறைந்துள்ளது.
உலகளவில் தண்ணீர் பாதுகாப்பு, சேமிப்பு மோசமான நிலையில் இருக்கிறது. உண்மையக் கூறுவதென்றால், பூமியில் உள்ள தண்ணீரில் 0.5 சத வீதம் மட்டுமே பயன்படுத்தப்படாமலும், சுத்தமான நீராகவும் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீரை அசுத்தப்படுத்துவது, அதானால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து, பெருவெள்ளம் தொடர்பான பேரழிவுகள் 134 சதவீதம் அதிகரித் துள்ளன. பெரும்பாலான பொருளாதார ரீதியான மற்றும் மனித உயிரிழப்புகள் ஆசியாவில்தான் நடந்துள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment