வாசிங்டன், அக். 9- 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்த ஒப்புதல் அளிக்குமாறு பைசர் நிறுவனம் அமெரிக்க அரசிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பைசர் நிறுவனம் தரப்பில், “5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்த அமெரிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். இது தொடர்பாக உணவு மற்றும் மருத்துவத் துறைக்கு விண் ணப்பம் அனுப்பியுள்ளோம். இது வரை எங்கள் நிறுவனம் 2,000க்கும் அதிகமான 5 --11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப் பூசி செலுத்தியுள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெ ரிக்க உணவு மற்றும் மருத்துவத் துறை குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசிகள் ஏற்றதா என்பதை விரைவில் அறிவிக்கும் என்று தெரி கிறது. இது தொடர்பான விவாதம் அக்டோபர் 26ஆம் தேதி நடை பெறவுள்ளது.
முன்னதாக, கனடா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் குழந் தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளே முதன்மையானதாகப் பார்க்கப் படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.
உலகம் முழுவதும் 23 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 21 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து உள்ளனர். 47 லட்சம் பேர் கரோ னாவுக்கு பலியாகி உள்ளனர்.
No comments:
Post a Comment