தசரா என்றாலே தமிழ்நாட்டில் அனை வருக்கும் நினைவிற்கு வருவது குலசேகரப் பட்டினம் அம்மன் கோவில் தசரா தான். குலசேகரப் பட்டினத்தில் உள்ள அம்மன் சாமி வேத மதம் அதாவது சனாதனம் என்ற இந்து மதத்திற்குள் வராது, ஆனால் வலுக் காட்டயமாக இந்துமதவழிப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டனர்*
நாட்டார் தெய்வங்கள் என்று போற்றப் படும் தமிழர்களின் வழக்கில் இருந்த பெண் கடவுள் தான் குலசை அம்மன்.
இத்தகைய பெண் தெய்வ வழிபாட் டினை தாய்த் தெய்வங்கள், கன்னி தெய்வங் கள் என இரு பிரிவுகளாக பிரிக்கின்றார்கள்.
குலசை அம்மனைப் பொறுத்தவரை அவர் ஒரு மருத்துவச்சி; தாய்தெய்வ வரி சையில் வருபவர், தொழுநோய் உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய் உள்ளவர்களை குலசையில் வாழ்ந்த அந்த மருத்துவச்சி அன்போடு அரவனைத்து சிகிச்சை அளித் திருக்கிறார்.
இவர் வாழ்ந்த காலம் கி.பி. 5 முதல் 6அம் நூற்றாண்டாக இருந்திருக்கக் கூடும். அதாவது சிவனைக்கும்பிடும் சைவமும், விஷ்ணுவைக் கும்பிடும் வைணவமும் தமிழகத்தில் வரும் முன்பு வாழ்ந்தவர்
தொழு நோய் உள்ளிட்ட சில கொடிய நோயுள்ளவர்கள் தங்களின் முகத்தை மறைத்துக் கொண்டு கால் நடையாகவே அந்த குலசை மருத்துவச்சியை காணச் செல்வார்கள்.
நாங்கள் குலசை மருத்துவச்சியை பார்க்க நாடாதி நாடு கடந்து வந்திருக்கிறோம் என்று கூறி செல்லும் வழியில் இருக்கும் மக்களிடம் உணவு வாங்கிக்கொண்டு அவர்கள் கொடுக்கும் உண்வை உண்டு குலசை சென்று அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெறுவார்கள். அவரை நம்பிச் சென்றவர்கள் பலர் நோயிலிருந்து மீண்டு திரும்பியுள்ளனர்.
அவரை சந்திக்கச்செல்லும் நோயாளி கள் தங்களின் அடையாளத்தை மறைக்க முகத்தை மறைத்தனர். அதன் தொடர்ச்சி யாகத்தான் இன்றும் குலசை செல்லும் பக் தர்கள் விரதமிருந்து பல்வேறு வேடமிட்டு அந்த அம்மனை பார்க்கச்செல்கின்றனர். அரக்கனை அழிக்கும் செயல் என்பது நோயை நீக்குவதைக் குறிக்கும். பொதுவாக நோயுள்ளவர்கள் வெயில் காலங்களில் பயணம் செய்வதை தவிர்த்து மழைக் காலத்தை தேர்ந்தெடுத்துச்சென்றனர்.
அந்த மருத்துவச்சி இறந்த பிறகு அவரை நாட்டர் தெய்வமாக்கி நெல்லை பகுதிமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
மற்றபடி சூரஹம்சாரம் பல்வேறு உருவத்தில் அம்மனை தேர் இழுத்துவருதல் போன்றவை எல்லாம் இடையில் சொருகப் பட்ட கதைகள் இந்த கதைகள் எல்லாம் சுமார் 50 ஆண்டுகளாக பிரபலமானது.
அந்த மருத்துவச்சி நீண்ட நாள் வாழ்ந்து செத்துப்போனார். அவருக்குப் பின்னர் யார் அந்தப்பணியைத் தொடர்ந்தார்கள் என்ற தகவல் மறைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு முத்தாரம்மன் என்று பெயர் எல்லாம் கிடையாது, அந்தப்பெயர் பிற் காலத்தில் கடற்கரை அதில் விளையும் முத்து போன்றவற்றை வைத்து முத்து + ஆரம் (மாலை) முத்தாரம்மன் என்று வைத்து விட்டனர்.
தகவல்கள் பேராசிரியர் சிவசுப்பிர மணியன் அவர்களிடமிருந்து பெற்றது, மேலும் சில பாளை புனித சவேரியார் கல்லூரியில் உள்ள நாட்டார் வழக்காற்றியல் மன்ற நூலகத்தில் திரட்டியது அவர் மண் ணில் சிகிச்சை அளிப்பார் என்று சொல்ப வர்கள் உண்டு, அதாவது கடற்கரை மணல்.
No comments:
Post a Comment