உலக உணவு நாளும் உணவுப் பொருட்கள் வீணடிப்பும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

உலக உணவு நாளும் உணவுப் பொருட்கள் வீணடிப்பும்

இன்று (அக்டோபர் 16)  உலக உணவு நாள் கொண்டாடப்படுகிறது. 1945ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பன்னாட்டு அமைப்பான அய்க் கிய நாடுகள் சபையின், உறுப்பு அமைப்புகளுள் ஒன்றாக உருவாக்கப்பட்ட உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 20 ஆம் ஆண்டு விழாவில் 1979 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டின் முயற்சியால் இந்த உணவு நாள் அறிவிப்புக்கான தீர்மானம் நிறைவேறியது.

உலக மக்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவை உறுதி செய்தல் என்னும் பொது நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப் பொருளுடன் கொண்டாடப்படும் இந்த நாள், இந்த ஆண்டு "இன்றைய பாதுகாப்பான உணவே நாளைய ஆரோக்கியம்" என்னும்  கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. 2050 ஆம் ஆண்டு மிகப் பெரிய உணவு தட்டுப்பாடு வரும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வறிஞர்கள். இந்த நிலையில் இந்தியாவில் மதத்தின் பேரால் பண்டிகையின் பேரால் வீணாக்கப்படும் உணவுப் பொருட்களின் மதிப்பு பல கோடிகள். கடந்த இரண்டு நாட்களாக ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை என்ற பெயரால் உடைக்கப்பட்ட புரதச் சத்து மிக்க பூசணிக் காய்கள் , ஒவ்வொரு ஆண்டும் வீட்டுக்கு வீடு சாலையில் உடைத்து வீணாக்கப்படும் தேங்காய் கள், (வியாபார நிறுவனங்கள் ஒவ்வொரு வார மும் தெருவில் உடைத்து வீணாக்குகின்றனர்), பாலாபிஷேகம் என்ற பெயரில் கோயில்களில் குடம் குடமாகக் கொட்டப்படும் பால், வேள்வி களில் ஊற்றப்படும் நெய் போன்றவை ஊட்டச் சத்து மிக்க உணவுப் பொருட்கள், இவையின்றி வாடும் குழந்தைகள் பல கோடிப் பேர்.

உலக உணவு நாளில் இவ்வாறு வீணாக்கப் படும் உணவுப்பொருட்களை அரசு தடுக்கும் வகையில் சிந்திக்க வேண்டும்.

- ழகரன்

No comments:

Post a Comment