கும்பகோணம்: ‘நீட்’ தேர்வு ஒழிக்கப்படவேண்டும் - ஏன்? எதற்கு? கருத்தரங்கத்தில்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
கும்பகோணம்,
அக்.14 மனுதர்மத்திற்கும்,
சமதர்மத் திற்கும் நடக்கக்கூடிய போராட்டத்தில் வெற்றி பெறவேண்டியது சமதர்மமே தவிர, மனுதர்மம் அல்ல என்கிற முடிவிற்கு வரவேண்டும். அதற்குப் பெற்றோர்களே, மாணவர்களே, இளைஞர்களே எல்லோரும் ஆயத்தமாகவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த
3.10.2021 அன்று
காலை 10.30 மணியளவில் கும்பகோணம்
ராயாஸ் அனுக்கிரஹா மகாலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ‘நீட்' தேர்வு ஒழிக்கப் படவேண்டும் - ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் நடை பெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
சிறப்புரை யாற்றினார்.
அவரது
சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
என்ன
அந்த தத்துவம்?
இரண்டே
வார்த்தையில் எழுதினார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபொழுது, ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்று.
ஆங்கிலத்தில்
பெரிய பெரிய வார்த்தைகளைப் போடுகிறார்கள் அவர்கள், ‘‘இன்க்ளூசிவ் குரோத், எஸ்க்ளூசிவ் குரோத்'' என்றார்கள். எஸ்க்ளூசிவ் குரோத் என்றால், பிரித்து விடுவது; இன்க்ளூசிவ் குரோத் என்றால், இணைக்கிறது.
வருணாசிரம
தர்மம் இணைக்கிறதா? பிரிக்கிறதா?
எது
பிரிக்கிறது?
‘யாதும்
ஊரே, யாவரும் கேளிர்' எது இணைக்கிறது? எது பிரிக்கிறது?
‘யாதும்
ஊரே, யாவரும் கேளிர்' என்பது திராவிடம்.
உயர்ந்தஜாதி,
தலையில் பிறந்தவன், தோளில் பிறந்த வன், துடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன், அதற்கும் கீழே, அதற்கும் கீழே பெண்கள் என்று சொல்வது இருக்கிறதே, அது ஆரியம்.
இதுதான்
ஆரியத்திற்கும் - திராவிடத்திற்குமான போராட்டம்.
இதில்
வித்தியாசம் இருக்கிறது. இதுதானே மிக முக்கியமான தத்துவம். இதுதானே பெரியாரியம் என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவே
நண்பர்களே, இந்தப் புத்தகத்தினுடைய அடிப்படை - இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தி மொழியிலும் பரவியிருக்கிறது.
ஏனென்றால்,
நோய் ஆங்காங்கே பரவும்பொழுது, தடுப்பூசியைக் கேட்பார்கள் அல்லவா!
இந்தியாவிலுள்ள
பல மாநிலங்களிலும்...
அதுபோன்று,
உத்தரப்பிரதேசத்தில் பெரியார் புத்த கங்கள் நிறைய பரவுகின்றன. அதேபோல, ராஜஸ்தானில்.
இதோ
பாருங்கள், இதை எழுதியது நாங்கள் அல்ல.
These books were a hit among women and students belonging to marginalised sections of society in Bihar, Uttar Pradesh, Madhya Pradesh, Chhattisgarh, Rajasthan, and Delhi.
இந்தியில்
புத்தகம் போட்டது எங்களுக்கே தெரியாது. பெரியார் கொள்கைகள் நாடு முழுவதும் பரவுகின்றன. செல்போன் எப்படி எல்லோர் கைகளிலும் இருக்கிறதோ. அதுபோன்று.
பெரியார்
என்பது சமூக விஞ்ஞானம்
சென்னையில்
செய்தியாளர்கள் என்னிடம் கேட் டார்கள், ‘‘இப்பொழுது எல்லோரும் பெரியார், பெரியார் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொல் கிறார்களே, அதற்கு என்ன காரணம்?'' என்று.
‘‘எல்லா
குழந்தைகளும் செல்போனை விரும்புகிறார் களே, அதற்கு என்ன காரணமோ, அதே காரணம்தான்'' என்றேன்.
ஏனென்றால்,
விஞ்ஞானம் அது. பெரியார் என்பது சமூக விஞ்ஞானம். இது காலத்தால் மாறாது. வளருமே தவிர, எல்லா இடங்களிலும் மிக ஆழமாகப் போகுமே தவிர - இது என்னைப் பொறுத்தது, அவரைப் பொறுத்தது, இவரைப் பொறுத்தது என்பதல்ல. எதுவுமே இல்லாமல் இருந்தாலும், பெரியார் வளருவார் - காரணம், விஞ்ஞானத்தை யாரும் தவிர்க்க முடியாது. சனாதானம் அதற்கு சவாலாக இருந்தாலும், அது வாழ முடியாது என்பதுதான்.
நம்முடைய
பிள்ளைகளின் மருத்துவக் கனவை சிதைப்பதற்காக நீட் தேர்வு!
இப்பொழுது
அதையெல்லாம் மழுங்கடிக்கும் முயற்சி தான் - மருத்துவக் கனவை சிதைப்பதற்காக நீட் தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சி
வந்தவுடன், நீட் தேர்வை ஒழிக்கிறேன் என்று சொன்னார்களே, அப்படி செய்யவில்லையே என்று சிலர் கேட்கிறார்கள்.
தி.மு.க.வினுடைய
அதிகாரத்தில் அது இருந்திருந்தால், உடனே உத்தரவு போட்டு செய்து முடித்திருப்பார்.
அரசமைப்புச்
சட்டத்தினுடைய பகுதியில் உள்ளது. அதற்காகத்தான் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்
தலை மையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையைப் பெற்று, ஒரு மனதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கும், குடியரசுத் தலைவ ருக்கும் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த
ஆட்சியிலும் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டு திரும்பி வந்ததே என்று சொன்னால், பிடிவாதக் காரர்கள் அதை செய்தாலும் - முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கும் - அ.தி. மு.க. அதற்கு முன்பு
நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கும் - இப்பொழுது மு.க.ஸ்டாலின்
அவர்கள் முதலமைச்சராக வந்து நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கும் என்ன வேறுபாடு என்றால், மிக முக்கியமான வேறுபாடாகும். இரண்டும் ஒரே மாதிரியல்ல.
புள்ளி விவரத்தோடு நிறைவேற்றப்பட்ட மசோதா
முதலில்
நிறைவேற்றப்பட்ட சட்டம் என்பது வெறும் மசோதா. இப்பொழுது நிறைவேற்றப்பட்ட மசோதா என்பது, காரண காரியத்தோடு, இன்னும் விரிவான அளவிற்கு, நான்கு ஆண்டுகள் நீட் தேர்வு நடைபெற்று இருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? யார்? அவர்களிடம் கேட்டு, நகர்ப்புற மாணவர்களின் ஆதிக்கம் - கிராமப்புற மாண வர்களுக்கு வாய்ப்பு குறைவு - ஒடுக்கப்பட்ட மாணவர் களுக்கு வாய்ப்பு குறைவு - தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வாய்ப்பு குறைவு - இதை அத்தனையும் புள்ளிவிவரத்தோடு எடுத்துக்கொடுத்து, நிபுணர்கள், ஆய்வாளர்கள் கருத்து அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முந்தைய
அ.தி.மு.க.
அரசு, மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதையே வெளியில் சொல்லவில்லை. கமுக்கமாக இருந்துவிட்டார்கள். அந்த விவரம் எப்படி வெளியில் வந்தது என்றால், நீதிமன்றத்தில் கேட்ட பிறகுதான், அது வெளியில் வந்தது.
அப்பொழுது
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, இன்றைய முதலமைச்சர் ஒரு கேள்வி கேட்டார். ‘‘நீங்கள் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதை மறைத்ததோடு மட்டுமல்லாமல், என்ன காரணத்தினால் திருப்பி அனுப்பு னீர்கள் என்று கடிதம் எழுதினீர்களா குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு'' என்று கேட்டார்.
மக்கள்
ஆதரவு ஏராளமாக இருக்கிறது
இப்பொழுது
அனுப்பப்பட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்பினால் விட்டுவிடுவோமா? ஒரு நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தக் கூடிய அளவிற்கு, வலிமை வாய்ந்த பின்னணி இருக்கிறது. அந்த சட்டப் போராட் டத்தை அரசு நடத்துகின்ற காலகட்டத்தில், மக்கள் ஆதரவு ஏராளமாக இருக்கிறது என்று காட்டுவதற்காகத்தான் இதுபோன்ற கூட்டங்கள்.
இனி
தமிழ்நாடு முழுக்க - எப்படி கம்யூனல் ஜி.ஓ. என்கிற
வகுப்புவாரி உரிமை ரத்து செய்யப்பட்டபொழுது, பெரியார் அவர்கள், நாட்டையே திரட்டினார்கள் - ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லாத இடத்தில். ஒரே ஒரு வித்தியாசம், பிரதமர் நேரு ஒரு ஜனநாயகவாதி. சட்ட அமைச்சராக இருந்தவர் அண்ணல் அம்பேத்கர்.
நீட்
தேர்வை ரத்து செய் - குறைந்தபட்சம், தமிழ்நாட்டிற்கு விதிவிலக்குக் கொடு!
இது
இன்றைக்குத் தமிழ்நாட்டில் மட்டும் வராது; இந்தியா முழுமைக்கும் வரும் என்று முன்கூட்டியே சொல்லி, முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் எப்படி வந்ததற்கு தமிழ்நாடு காரணமோ, அதேபோல, நீட் தேர்வை ரத்து செய் - குறைந்தபட்சம், தமிழ்நாட்டிற்கு விதிவிலக்குக் கொடு.
அரசமைப்புச்
சட்டத்தில், கல்வி என்ன ஒன்றிய அரசின் பட்டியலில் இருக்கிறதா? யூனியன் லிஸ்ட் - ஸ்டேட் லிஸ்ட் - ஒன்றிய அரசு - மாநில அரசு. இன்னொரு பட்டியல் இருக்கிறது - அதற்கு என்ன பெயர் அரசமைப்புச் சட்டத்தில் என்றால், கன்கரண்ட் லிஸ்ட் என்பது.
கன்கரண்ட்
என்றால், அதை எப்படி சிலர் மொழி பெயர்க்கிறார்கள்? சட்டசபையில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது என்று ஆளுங்கட்சியை சேர்ந்த சிலரே தவறாகச் சொல்கிறார்கள். அது தீர்மானம் அல்ல. அது மசோதா. தீர்மானத்திற்கும், மசோதாவிற்கும் வித்தியாசம் உண்டு.
தீர்மானம்
என்றால், ஒன்றும் கிடையாது. ஆனால், மசோதாவில் கையெழுத்துப் போட்டால் சட்டமாகும்.
அதுபோன்று,
கன்கரண்ட் லிஸ்ட் என்ற வார்த்தைக்கு, அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற அர்த்தம் என்ன வென்றால், மாநிலமும் செய்யலாம், ஒன்றிய அரசும் செய் யலாம் என்றாலும், ஒன்றிய அரசு, மாநில அரசினுடைய அதிகாரத்திற்குள் ஒரு சட்டம் செய்யும்பொழுது, மாநில அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும்; இசைவைப் பெற வேண்டும். கன்கரண்ட் என்பதற்கு அர்த்தம் என்ன வென்றால், ஒப்புதல் கொடு என்பதுதான்.
ஆனால்,
மாநில அரசின் ஒப்புதலை ஒன்றிய அரசு கேட்கவில்லை.
மதுரையில்
எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிட்டதா?
இன்னொரு
செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.
மாநிலங்களில்
மருத்துவக் கல்லூரி தொடங்குவதன்படி மதுரையில்
எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிட்டதா? அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆகின்றதே!
அந்த
அடிக்கல்லில் ஒரே ஒரு செங்கல்லை எடுத்துக் கொண்டு, உதயநிதி ஸ்டாலின் ஊர் முழுவதும் சென்று பேசிவிட்டார்.
மதுரையில்
வெறும் செங்கல்தான் இருக்கிறது.
இந்தியாவிலேயே
தமிழ்நாட்டில்தான் அரசு மருத்துவக் கல்லூரிகள் எல்லா மாவட்டங்களிலும் வரக்கூடிய அள விற்கு அடித்தளமிட்டவர்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்.
அதில்கூட
நிதி ஆதாரம் எப்படி கொடுக்கிறார்கள் என்றால், மாநிலங்களுடைய பங்கு 84.4 சதவிகிதம் நம்முடைய பணம். ஒன்றிய அரசினுடைய பங்கு வெறும் 15.6 சதவிகிதம்.
கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுகுவதா?
வெறும்
15.6 சதவிகிதத்தை மட்டும் நீங்கள் செலவு செய்துவிட்டு, நாங்கள் மருத்துவக் கல்லூரியை உருவாக்கிய பிறகு, கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுகுந்தது போன்று, எல்லாவற்றையும் நாங்கள் தயார் செய்த பிறகு, அவர்கள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து ஆட்களை அனுப்புவார்களா?
நம்மாள்
எல்லாவற்றையும் கஷ்டப்பட்டு சமைத்து வைத்தால், சாப்பிடுவதற்கு அவாள் வந்து உட்கார்வார்கள்; இவாள் வெளியில் வந்துவிடுவார்கள்.
இதுதான்
நீட் தேர்வு - வேறொன்றும் இல்லை.
நீட்
தேர்வினுடைய கொடுமை என்ன? அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கு விரோதம். அது சட்டப்படியே பொருந்தி வரவில்லை. அதை சொன்னது யார்?
நீதிபதி
தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இது ஒரு பக்கம்.
சமூகநீதி
இன்னொரு பக்கம் -
ஏழை,
எளிய மாணவர்கள், தமிழ் படித்தவர்கள் யாருமில்லை.
இரண்டு
பாடத் திட்டம் -
மாநிலக்
கல்வித் திட்டம் -
ஒன்றிய
கல்விப் பாடத் திட்டம்.
ஒன்றிய
கல்விப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் தான் நீட் தேர்வுக்கான கேள்வித் தாள்கள் தயாரிக்கப் படுகின்றன.
ஆகவே
நண்பர்களே, இந்த நீட் தேர்வு என்பது 18 மாணவர்களின் உயிர்களை பலி வாங்கியிருக்கிறது, பலி பீடத்தில்.
ஏழை,
எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெறவில்லை. சிலர் கேட்கிறார்கள், புதிதாகக் கிளம்பியிருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்,
‘‘நம்முடைய
பிள்ளைகள் வந்திருக்கிறார்கள்'' என்று.
நீதிமன்றம்
சொல்லியிருக்கிறது அதற்கான பதிலை.
நீட்
தேர்வு எழுதி, வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் யார்?
‘‘நீட்
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில், மூன்றில் இரண்டு பகுதி மாணவர்கள் யார் என்றால், மூன்றாவது, நான்காவது முறை தேர்வு எழுதியவர்கள். அவர்கள் எப்படி தேர்வு எழுதினார்கள், எட்டு லட்சம் ரூபாய், பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து, கார்ப்பரேட் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று தேர்வு எழுதினார்கள்.
முதலாவதாக
பீகாரைச் சேர்ந்தவர் வந்தார். எப்படி வந்தார் என்றால், அவர் பள்ளிக்கூடம் சென்றதோ பீகாரில் - அவர் பயிற்சி எடுத்தது டில்லியில். பள்ளிக்கூடத்திற்குச் சென்றதற்கான வருகைப் பதிவேடே இல்லை.
நீட்
தேர்வு வேண்டும் என்று ஏன் சொல்லுகிறீர்கள் என்று கேட்டால்,
ஊழல்
பெருகிவிட்டது என்றார்கள். சரி, ஊழல் பெருகிவிட்டது என்கிறீர்களே, கடந்த நான்கு ஆண்டு களாக நடைபெற்ற நீட் தேர்வுகளில், எல்லா இடங்களிலும் கேள்விக் குறி - கேள்வித் தாள்களில் குளறுபடி.
கரோனா
தொற்று காரணமாக, மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ., தேர்வுகளைத்
தள்ளி வைத்தார்கள், ரத்து செய்தார்கள். ஆனால், நீட் தேர்வை தள்ளி வைக்க மாட்டோம் - கரோனா தொற்று என்றாலும், எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று பிடிவாதம் காட்டி, நடத்தினார்களே, அந்தத் தேர்வில் 35 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு, கேள்வித் தாளை அவுட் செய்தார்களா? இல்லையா?
நீட் தேர்வு, மனிதர்களையே அவதாரம் எடுக்க வைக்கிறது!
நம்முடைய
பிள்ளைகள் கஷ்டப்பட்டு படித்து, பிளஸ் டூ வகுப்பில் 200-க்கு
200 மதிப்பெண்களைப் பெற்றுவிட்டு, நம்முடைய அனிதாக்கள் சாகிறார்கள்.
அவர்கள்
நோகாமல், வேறொரு ஆளை வைத்து - ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுகிறார்கள்.
அவர்களுடைய
கூற்றுப்படி இதுவரை கடவுள்தான் அவதாரம் எடுத்திருக்கிறார்; நீட் தேர்வு, மனிதர்களையே அவதாரம் எடுக்க வைக்கிறது.
இதுதான்
ஊழலை ஒழிக்கின்ற லட்சணமா?
‘‘உச்சநீதிமன்றம்,
உச்சநீதிமன்றம்'' என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்; உச்சநீதிமன்றம்தானே, முதன்முதலில் நீட் தேர்வு கூடாது என்று தீர்ப்பு கொடுத்தது. அந்த
வரலாறை ஏன் மறைக்கிறீர்கள்?
மூன்று
நீதிபதிகள் கொண்ட அமர்வில், இரண்டு நீதிபதிகள் நீட் தேர்வு தேவையில்லை என்று தீர்ப்பு கொடுத்தார்கள். அதில் ஒரு நீதிபதி குஜராத் அய்யர் மாறுபட்ட கருத்தை சொன்னார்.
அந்த
இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெற்றுச் சென்றவுடன், மறுசீராய்வு என்று சொல்லி, மீண்டும் ஒரு மனு போட்டு, அந்த வழக்கை விசாரித்த நீதிபதி யார் என்றால், மாறுபட்ட கருத்தை சொன்ன அதே நீதிபதிதான்.
காங்கிரஸ்
ஒன்றிய ஆட்சியில் இருந்தபொழுதுதான் நீட் தேர்வு கொண்டு
வரப்பட்டது என்று சொல்கிறார்களே, அன்றைக்கு நீட் தேர்வையே ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று சொன்ன முதலமைச்சர் யார் தெரியுமா? குஜராத் முதலமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மோடி அவர்கள்தான்.
மக்களுக்கு
மறதி அதிகம் - நேற்றைய விஷயம் மறந்து போகும் - அதை வைத்து நாம் அரசியல் நடத்தலாம் என்பதுதானே உங்களுடைய எண்ணம்.
நீட்
தேர்வு என்பது, கூட்டாட்சிக்கு விரோதம்!
ஆகவே,
இந்த நீட் தேர்வு என்பது, கூட்டாட்சிக்கு விரோதம் - ஏழைகளுக்கு விரோதி - கிராமப் பிள்ளை களுக்கு விரோதி - தமிழ்ப் படித்தவர்களுக்கு வாய்ப்பைக் கெடுப்பது - அதேபோன்று, அரசமைப்புச் சட்டத்தினுடைய தத்துவங்களுக்கு விரோதம் - நம்முடைய பிள்ளைகளுக்கு வாய்ப்புகள் கிடையாது.
எனவேதான்,
நம்முடைய நாட்டில் இனிமேல் பார்த் தீர்களேயானால், இங்கே நண்பர்கள் சொன்னதுபோன்று, உத்தரப்பிரதேசத்துக்காரன்
இங்கே வந்து அமர்ந்து கொண்டு, வேலை செய்யாமல் இருப்பான். அத்தனை உரிமைகளும் பறிபோகும்.
ஆகவே,
நீட் தேர்வு ஒழிப்பிற்காக மிகப்பெரிய போராட் டக் களம் தமிழ்நாடு முழுவதும் அமையும். அது எத்தனை ஆண்டுகாலத்தில் நடைபெறும் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை.
21 ஆண்டுகள்
தொடர்ந்து போராடி
அதில்
வெற்றி பெற்றோம்
முதலமைச்சர்
எம்.ஜி.ஆர். அவர்கள் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்த நேரத்தில், இளைஞர்களுக்குச் சொல்கிறோம், நம்பிக்கை இழக்காதீர்கள் - 21 ஆண்டுகள் தொடர்ந்து போராடி அதில் வெற்றி பெற்றோம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுதே அதை ஒழிக்கிறேன் என்று சொல்லக்கூடிய அளவிற்குக் கொண்டு வந்தோம்.
ஆனால்,
அந்த அம்மையார் ஒரு தவறு செய்தார்கள். என்னவென்றால், ஆளுங்கட்சிக்கு, திராவிடர் கழகம் ஒரு ஆலோசனையை சொன்னோம்.
‘‘நுழைவுத் தேர்வை ஒழிக்கிறோம் என்ற முடிவிற்கு வந்தது சரி. ஆனால், அதை ஒரு கமிட்டி போட்டு, ஆய்வு அறிக்கை வாங்கி அதை செய்தால்தான், நீதிமன்றம் சென்றாலும், அந்த சட்டம் நிற்கும்'' என்று திராவிடர் கழகம் வழக்கம்போல எடுத்து வைத்தோம்.
ஆனால்,
அந்த அம்மையார் அதை கேட்கவில்லை. நாங்களே ஒழிக்கிறோம் என்று சொல்லி, சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அந்த சட்டம் செல்லாது என்று நீதிமன்றம் சொல்லியது.
அன்றைக்கு
கலைஞர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். பிறகு முதலமைச்சராக வருகிறார். செயத்தக்க திருந்த செய்யவேண்டும் என்பதில் நம்பிக்கை உண்டு அவருக்கு. கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையில்
ஒரு குழு அமைத்து, இப்பொழுது ஏ.கே.ராஜன்
குழு அமைத்ததுபோன்று - தெளிவாக அமைத்து, அறிக்கை வாங்கினார். நுழைவுத் தேர்வினால் என்னென்ன கெடுதி என்று அந்த அறிக்கை சொல்லிற்று. அதை ஏற்று, நுழைவுத் தேர்வை ரத்து செய்யவதற்கான சட்டம் ஒன் றைக் கொண்டு வந்தார். அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
குடியரசுத்
தலைவர் கையெழுத்துப் போட்ட சட்டம், இன்றுவரையில் இருக்கிறது. அது செல்லாது என்றும் ஆக்கப்படவில்லை. ஆனால், இரட்டைக் குதிரை சவாரி போன்று அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.
நீட்
தேர்வு என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது!
எனவேதான்,
இந்த நீட் தேர்வு என்பது, சட்டத்திற்கு விரோதமாக - நியாயத்திற்கு விரோதமாக - ஜனநாயகத்திற்கு விரோதமாக - அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இருக்கிறது நண்பர்களே!
எனவேதான்,
நீட் தேர்வை ஒழிப்பது என்பது இருக்கிறதே, அது வெறும் தேர்வு அல்ல நண்பர்களே! இது ஒரு லட்சிய அடிப்படை.
எல்லோருக்கும்
எல்லாமும் கிடைக்கக் கூடாது என்று சொல்வது ஆரியம்.
அனைவருக்கும்
அனைத்தும் என்று சொல்வது திராவிடம்.
அனைவருக்கும்
அனைத்தும் என்று சொல்லும் பொழுது, பெரியார் யாரையும் வித்தியாசப்படுத்தவில்லை. பார்ப்பனர்களா? மூன்று சதவிகிதம் உள்ளவர்கள், அந்த சதவிகிதத்தை அவர்கள் அனுபவிக்கட்டும் என்றார்.
இன்னொரு
கோளாறு என்னவென்றால், நேற்று முன்தினம் வந்திருக்கின்ற செய்தி, தேர்வை அறிவித்துவிட்டு, திடீரென்று பாடத் திட்டத்தை மாற்றுகிறார்கள். புதிய பாடத் திட்டத்தின்படிதான் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படும் என்கிறார்கள்.
‘‘மாணவர்களைப்
பந்தாடுகிறீர்களே?’’
உச்சநீதிமன்றம்
சொன்னது என்று சொல்கிறார்களே, அதே உச்சநீதிமன்றம் இப்பொழுது என்ன கேள்வி கேட்கிறது, ‘‘மாணவர்கள் என்ன பந்தா? அவர்களைப் பந்தாடுகிறீர்களே?'' என்று.
ஆக,
உச்சநீதிமன்றமே இப்பொழுது உங்களைக் கேள்விக் கேட்கக்கூடிய அளவிற்குக் கொண்டு வந்துவிட்டது இந்த நீட் தேர்வு என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஆகவேதான்,
உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று சொல்வதெல்லாம் நடக்காது இனிமேல்.
எனவே
நண்பர்களே, ஒரு பக்கம் சட்டப் போராட்டம் - இன்னொரு பக்கம் மக்கள் போராட்டம்.
இந்தப்
போராட்டங்கள் என்பது முழுக்க முழுக்க அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான்.
அந்த
அடிப்படையில், மனுதர்மத்திற்கும், சமதர் மத்திற்கும் நடக்கக்கூடிய போராட்டம்.
வெற்றி
பெறவேண்டியது சமதர்மமே தவிர, மனுதர்மம் அல்ல!
வெற்றி
பெறவேண்டியது சமதர்மமே தவிர, மனுதர்மம் அல்ல என்கிற முடிவிற்கு வரவேண்டும். அதற்குப் பெற்றோர்களே, மாணவர்களே, இளைஞர்களே எல்லோரும் ஆயத்தமாகவேண்டும் என்று கேட்டு,
நீண்ட
நேரம் இந்தக் கருத்தைக் கேட்ட உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வாழ்க
பெரியார்! வளர்க
பகுத்தறிவு!
வாழ்க
சமூகநீதி! நன்றி, வணக்கம்!
இவ்வாறு
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment