கிருஷ்ணகிரி, அக்.14 தமிழ் நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவல கத்தில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர்
முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரப்பிரதேச
சம்பவத்திற்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத் துக் கட்சிகளும் கண்டனம் தெரிவித் துள்ளது. ஆனால் பிரதமர் கண்டிக் காமல் இருப்பது, இதனை ஆதரித்து, ஊக்குவிப்பதை போல உள்ளன.
பாஜக
அரசு நிறைவேற்றிய புதிய வேளாண்மை திருத்தச் சட்டங்கள், மின் திருத்த சட்டங்கள் ஆகிய வற்றை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர் காலத்தில் போராட்டங்கள் தீவிர மடையும். தீபாவளி நெருங்கும் நேரத்தில் அத் தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இத னைக் கட்டுப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். ரேஷன்க டைகள் மூலம் அத்தியா வசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும். சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண் டும். ஜிஎஸ்டி முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து விட்டதாக ஒருவித போலி தோற்ற த்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழ்
நாட்டில் ஒரு போதும் பாஜக காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment