வெற்றி
தென்காசி
மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தண்டனை
பாம்பை
கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் கணவன் சூரஜ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில்
அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோசடி
இணைய
சூதாட்டம் மூலமாக லட்சக்கணக்கான ரூபாயை ஏமாற்றியவரை நட்சத்திர விடுதியில் வைத்து கைது செய்தது சைபர் கிரைம் காவல்துறை.
பணிகளில்
அம்மா மினி கிளினிக் ஒரு குறுகிய காலத் திட்டம் என்றும் அங்கிருந்த பணியாளர்கள் தற்போது கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அவகாசம்
புதுச்சேரியில் உள் ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் தேவைப்படுவதாக உச்சநீதி மன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனுதாக்கல் செய்துள்ளது.
கையிருப்பு
மாநிலங்களின் கையி ருப்பில் 8.43 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நடவடிக்கை
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக் குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
உதகை மலை ரயில் சேவை
மண் சரிவால் 4 நாட் களாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. காலை 7.10 மணிக்கு மேட் டுப்பாளையத்தில் இருந்து 180 பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு சென்றது. கனமழையால் கல்லாறு-அடர்லி ரயில் நிலையங் களுக்கு இடையே 4 நாட் களுக்கு முன் மண்சரிவு ஏற் பட்டது.
No comments:
Post a Comment