மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் மறைவுக்கு இரங்கல்

மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் மன் றத்தின் பொருளாளரும், மக்கள் செய்தி மய்யம் வி.அன்பழகன் (வயது 61) அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (13.10.2021) காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பல்வேறு ஏடுகளிலும், செய்தி நிறுவனங் களிலும் பணியாற்றி வந்த தோழர் அன்பழகன், அரசியலிலும் அதிகாரத்திலும் உயரிடத்தில் இருப் போராயினும் அவற்றுக்கு அஞ்சாமல் உண்மைகளை வெளிக் கொண்டுவந்து அதன் காரணமாக சிறைக் கொடுமை வரை அனுபவித்தவர் ஆவார்.

ஊடகத் துறையில் அவரின் பணி தனித்துவ மிக்கதாகும். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறையினருக்கும், நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14-10-2021

No comments:

Post a Comment