ஆண்டிப்பட்டி, அக். 10- 1) அறிவு ஆசான் "தந்தை பெரியாரின் 143 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
2) இருபதாம் ஆண்டு குருதிக்கொடை முகாம்
3) விருது வழங்கும் விழா கரோனா காலத்தில் 2021 - அரசு தேனி மருத்துவமனை குருதி வங்கிக்கு அதிக எண்ணிக்கையில் குருதி சேகரித்து வழங்கியதில் ஆண்டிப்பட்டி தந்தை பெரியார் கொடைக்கழகம் முதலிடத்தில் உள்ளது
26.9.2021 அன்று ஆவுடையாச்சி மண்டபம் சக் கம்பட்டி ஆண்டிப்பட்டியில் தேனி மாவட்டம் தலை வர் ச.ரகுநாகநாதன் தலைமையில் தேனி மாவட்டச் செயலாளர் பூ.மணிகண்டன் மாநில அமைப்பு செயலாளர் மதுரை மு.செல்வம், பொதுக்குழு உறுப் பினர் பெரியகுளம் மு.அன்புக்கரசன், திண்டுக்கல் மண்டல செயலாளர் கருப்புச்சட்டை நடராஜன், இளைஞர் அணி தேனி மாவட்ட தலைவர் ம.சுருளி ராசு ஆகியோர் முன்னிலையில் கழக பெரியார் மணியம்மை இலக்கிய அமைப்பு தேனி மாவட்ட தலைவர் ச.மஞ்சில் செல்வி வரவேற்புரையாற்றினார்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகராசன் குருதிக்கொடை முகாமை துவக்கிவைத்து விருது வழங்கினார். தேனி மாவட்ட துணைத் தலை வர் ஸ்டார் சா.நாகராசன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ஸ்டார் நா.ஜீவா, நகர துணைத் தலைவர் மு.அழகர்ராஜா, நகர செயலாளர் இரா. ஆண்டிச்சாமி ஆகியோர் முகாமில் முதல் முறையாக குருதி கொடுத்தனர்.
வரவேற்புக் குழுத் தலைவராக ஆண்டிப்பட்டி ஒன்றியத் தலைவர் செ.கண்ணனும். ஆண்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ.ஆசையன், பெ. ராஜாராம், ஆ.ராமசாமி, லக்கி நாகராசன், த. பொன்னுத்துரை, பா. சரவணன் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டனர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
சிறப்புரையாக கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் பேசுகையில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூகநீதி நாள் என்று அறிவித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு ‘ நீட்’ தேர்வு தேவையற்றது என்பதற்கு சரியான மிக அரிய கருத்துகளை எடுத்துரைத்தார். மற்றும் குருதிக் கொடை பற்றிய நல்ல பல அறிவியல் கருத்துகளை கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் பேசி விழிப்புணர்வு வழங்கினார்.
நிகழ்வில் தேனி கலாம் நண்பர்கள் குழுவின் சார் பாக மயூரா ராஜேந்திரன் தலைமையில் ஆண்டிப்பட்டி ஸ்டார் நாகராசனுக்கு சிறந்த குருதிக்கொடை பணிக்காக கலாம் விருது வழங்கப்பட்டது
நகர் கழக தலைவர் வே.ஜோதி நன்றியுரை வழங் கினார்.
முகாம் சிறப்புகள்
சிறப்பு அழைப்பாளர் தேனி மாவட்ட காவல் ஆய்வாளர் சரவண தெய்வேந்திரன் அவர்கள் குருதிக் கொடை வழங்கி நிகழ்ச்சியை பாராட்டியும் விருதுகள் வழங்கி நல்ல பல கருத்துகளை எடுத்துரைத்தார்.
உசிலம்பட்டி முற்போக்கு கவிஞர் வேல்முருகன் நிகழ்வில் கலந்து கொண்டு குருதி வழங்கினார்.
தேனி மனிதநேய காப்பகத் தலைவர் தலைமையில் காப்பகத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட மாண வர்கள் முதல் முறையாக குருதி வழங்கினர். ஆண்டு தோறும் உசிலை தையலர் அய்யர் தலைமையில் சந்துரு மைதீன் அர்ஜுன் என அதிகம் பேர் குருதிக் கொடை அளித்தனர்.
முகாமில் 200க்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். அதில் உடல் தகுதியான 103 நபர்களிடம் குருதி சேகரித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குருதி வங்கிக்கு நன்கொடையாக யூனிட் வழங்கியது மகிழ்ச்சி அளித்தது.
அரசு குருதி வங்கி பொறுப்பாளர் மருத்துவர் அனுமந்தன் பேசுகையில் தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் குருதி (யூனிட்) வழங்கியதில் ஆண்டிப்பட்டி முதலிடத்தில் உள்ள தாக பாராட்டி சான்றுகள் வழங்கினார். ஆண்டிப் பட்டி ஸ்டார் அறக்கட்டளை சார்பாக விருதுகளும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப் பட்டன.
ஆண்டிப்பட்டி நகர திராவிடர் கழகம், தந்தை பெரியார் குருதிக்கொடைக் கழகம், நோபிள் டோனட்ஸ் கிளப் ஆண்டிபட்டி ஆகிய அமைப்புகள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment