நேபாள நாட்டின் அமைச்சரவை விரிவாக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

நேபாள நாட்டின் அமைச்சரவை விரிவாக்கம்

காட்மாண்டு, அக். 10- நேபாள நாட்டின் பிரதமராக கே.பி. ஷர்மா ஒலி இருந்து வந்தார். அவருக்கு எதிர்ப்பு கிளம்ப அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஷர்மா ஒலிக்குப் பதிலாக ஷெர் பகதூர் டியூபாவை பிரதமராக நியமித்தது. மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டது.

அதன்படி கடந்த ஜூலை மாதம் ஷெர் பகதூர் டியூபா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார். ஆனால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஷெர் பகதூர் டியூபா பதவி ஏற்ற 90 நாட்களுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணில் இருந்து பார்க்கும் வகையில் பயணங்கள்

வாசிங்டன், அக். 10- அமெரிக்காவின் அரிசோனாவை தளமா கக் கொண்ட வேர்ல்டு வியூ (World View) என்னும் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பலூன் தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களை விண்வெளி  சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.

வெப்பக் காற்றில் இயங்கும் பலூனை போல் இல்லாமல், ஹீலியம் வாயுவை பயன்படுத்தி பலூனை மெல்ல மெல்ல பல ஆயிரம் அடி உயரத்துக்கு பறக்கவிட திட்டமிடப் பட்டுள்ளது. 2024ஆம் அண்டு முதல் தொடங்கும் சுற்றுலா சேவையில் முற்கட்டமாக சீனப் பெருஞ்சுவர், எகிப்து பிரமிட், அமேசான் காடுகள் உள்ளிட்ட இடங்களை விண் ணிலிருந்து பார்க்கும் வகையில் பயணங்கள் ஏற்பாடு செய்ய வேர்ல்டு வியூ திட்டமிட்டுள்ளது.

இந்த பயணம்  ஆறு முதல் எட்டு மணி நேரம் நீடிக்கும் மற்றும் பயணிகளை குறைந்தது 100,000 அடி (30,000 மீட்டர்) உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

வெர்ஜின் கெலக்டிக் (Virgin Galactic), புளு ஆரி ஜின் (Blue Origin) போன்ற நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலா செல்ல 2 லட்சம் அமெரிக்க டாலர் வசூலிக்கும் நிலையில், பலூனில் சென்று பார்க்க வேர்ல்டு வியூ  நிறுவனம் 50 ஆயிரம் டாலர் மட்டுமே நிர்ணயித்துள்ளது.

No comments:

Post a Comment