வாசிங்டன், அக். 10- செவ் வாய்க் கோளில் உயிரினங் கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி வைத்தது. செவ் வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப் பப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அனுப்பப் பட்ட இந்த விண்கலம், கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய்க் கோளில் ‘ஜெசேரோ பள்ளத் தாக்கு’ என்று அழைக் கப்படும் பகுதியில் வெற் றிகரமாக தரையிறங்கி யது. இதற்கு முன் நாசா அனுப்பிய ஆர்பிட்டர் கள் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களின் அடிப் படையில், இந்த குறிப் பிட்ட பள்ளத்தாக்கு பகு தியில் நீர்நிலைகள் இருந் ததற்கான ஆதாரம் இருக் கலாம் என அறிவியலா ளர்கள் கருதியதால், இந்த ‘ஜெசேரோ பள்ளத் தாக்கு’ பகுதியை ஆய்வுக் காக நாசா தேர்ந்தெடுத் தது.
இந்த நிலையில் தற் போது ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தின் ரோவர் கருவி மூலம் எடுக்கப் பட்ட செவ்வாய்க் கோளின் ஒளிப்படங்களை நாசா தற்போது வெளியிட்டு உள்ளது. செவ்வாய்க் கோளின் மேல்பரப்பில் அமைந்துள்ள மலைகள், பாறைகள், படிமங்கள் ஆகியவற்றை இதுவரை இல்லாத அளவு துல்லி யமான தரத்தில் இந்த ஒளிப்படங்களில் காண முடிகிறது.
‘பெர்சவரன்ஸ்’ விண் கலத்தின் செயல்பாடு களை புளோரிடாவில் உள்ள நாசா வானியலா ளர் எமி வில்லியம்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள செவ்வாய் கோளின் ஒளிப் படங்கள் குறித்து எமி வில்லியம்ஸ் கூறுகையில், ஜெசேரோ பள்ளத்தாக் கின் மேற்பரப்பில் காணப் படும் பாறைகளின் அம் சங்களுக்கும், நமது பூமி யின் நதி டெல்டாக்களில் உள்ள வடிவங்களுக்கும் இடையே பல ஒற்றுமை கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒளிப்படத்தில் காணப் படும் மூன்று அடுக்குக ளின் வடிவமானது, சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கோளில் நீரோட்டம் இருந்ததற் கான ஆதாரமாக இருக் கலாம் என்று குறிப்பிட்ட அவர், இந்த படங்கள் ஒரு புத்தகத்தைப் படிப் பது போன்றது என்றும் ரோவர் கருவியை எங்கு அனுப்ப வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிப்பதற்கு இது உதவும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment