உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.79 கோடியாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.79 கோடியாக உயர்வு

பெய்ஜிங், அக். 10- சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்ப ரில் முதன் முதலாக வெளிப்பட்ட கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகி றது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன் றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற் றின் வீரியம் குறைந்தபா டில்லை. கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத் தொடங்கியுள்ளது.

இதனால், உலக நாடு கள் விழி பிதுங்கி நிற்கின் றன. தற்போதைக்கு தடுப் பூசியால் மட்டுமே கரோனா வைரஸ் பரவலைக் கட் டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வரு கிறது. டெல்டா வகை கரோனா பரவலால் அய்ரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பர வல் அதிகரிக்கத் தொடங் கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு அதிக முள்ள நாடுகளின் பட்டி யலில் அமெரிக்கா, இந் தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் இது வரை 237,969,872 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,856,327 பேர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 215,108,827 பேர் குணம டைந்து வீடு திரும்பிய நிலை யில் 18,004,718 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment