சவுதி அரேபியா, அக். 10- சவுதி யின் தெற்கு நகரமான ஜிசானில் உள்ள கிங் அப் துல்லா விமான நிலையத் தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 பேர் காய மடைந்தனர்.
ஏமன் நாட்டில் அதி பர் மன்சூர் ஹாதி தலை மையிலான அரசு படை களுக்கும், ஹவுதி கிளர்ச் சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சண்டை நடை பெற்று வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர் களை ஈரான் ஆதரிக்கி றது. அதேபோல் ஏமன் அரசு படைகளுக்கு ஆத ரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த உள்நாட்டு போர் கார ணமாக ஏமனில் ஆயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர்.
ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அரசுப்படை களுக்கும் 2015 ஆம் ஆண்டு மூண்ட சண்டை சுமார் ஒரு கோடி பேரை நடுவீதிக்குக் கொண்டு வந்தது. உண்ண உணவு, பருக நீர், சிகிச்சைக்கு மருந்து, தேவைக்கு மின் சாரம் என எதுவும் இல் லாமல் பல கோடிக்கும் அதிகமானோர் வாழ்ந்து வருவதாக 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மதிப்பிடப்பட்டது.
நாட்டின் பல பகுதி களில் போதுமான உணவு இல்லை. மின் நிலையங் களில் 95 சதவிகிதம் குண்டு வீச்சில் சேதமடைந்து விட்டதால், பல நகரங்கள் மாதக்கணக்கில் இருளி லேயே தவித்து வருகின் றன. மொத்தமுள்ள இரண்டரைக் கோடி மக்களில் இரண்டு கோடி மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் மனிதநேய உத விகள் தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
சவுதியின் தெற்கு நக ரமான ஜிசானில் உள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர்.
ஆறு சவுதி நாட்டினர், மூன்று வங்கதேசத்தவர் கள் மற்றும் ஒரு சூடான் நாட்டைச் சேர்ந்தவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் விமான நிலையத்தின் சில முகப்பு கண்ணாடிகளும் உடைந் துள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment