டெல்டா வைரசால் இளம் வயதினர், பெண்கள் அதிகம் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

டெல்டா வைரசால் இளம் வயதினர், பெண்கள் அதிகம் பாதிப்பு

ஜெனீவா, அக். 10- இந்தியாவில் கரோனா பாதிப்பு, -19 வயதினர் மற்றும் பெண்களிடம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்., 27 - முதல் அக்., 3 வரையிலான வாரத்தில் கரோனா பாதிப்பு குறித்த புள்ளி விபரத்தை, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கிய, 9,500 பேரிடம் நடத்திய சோதனையில், 19 வயதுக்கு உட்பட் டோர் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்து உள்ளது. குறிப்பாக 'டெல்டா' வைரசால், இளம் வயதினரும், பெண்களும் அதிகம் பாதிக்கப் பட்டு உள்ளனர்.

அதேபோல இறப்பு விகிதம், தடுப்பூசி செலுத்திய பின்னும் பாதிப்பிற்கு ஆளாவது போன்ற வற்றிலும், சாதாரண வைரசை விட, டெல்டா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவில் கரோனா பாதிப்பு 21 சதவீதம் குறைந்து, 1 லட்சத்து 61 ஆயிரத்து 158 ஆக சரிவடைந்துள்ளது. உயிரிழப்பு 9 சதவீதம் குறைந்துள்ளது. ஆகஸ்ட் முதல் உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகி றது. மதிப்பீட்டு வாரத்தில் புதிதாக 31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள் ளனர். 54 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

பன்னாட்டு நிலவரப்படி கரோனா பாதிப்பு 23.40 கோடி யாகவும், இறப்பு 48 லட்சமாகவும் உள்ளது. மதிப்பீட்டு வாரத்தில் பாதிப்பு 9 சதவீதம் குறைந்துள்ளது. அய்ரோப்பிய பிராந்தியம் தவிர இதர பகுதிகளில் பாதிப்பு சரி வடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment