வாசிங்டன், அக். 10- 'கரோனா அச்சுறுத் தல் காரணமாக அமல்படுத்தப் பட்ட பயண தடைகளை சுட்டிக் காட்டி, 'விசா' வழங்கும் நடை முறைகளை நிறுத்தி வைத்துள்ளது சட்டவிரோதம்' என, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, அமெரிக்கா வில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, பிரிட்டன், அயர் லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன.எனினும் இந்த பயண தடையை காரணம் காட்டி, வெளிநாட்டினருக்கு விசா வழங் கும் நடைமுறைகளையும் அமெ ரிக்க வெளியுறவுத் துறை நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் நிறுவனங்கள், குடியேற்றத் துறை சட்ட நிறுவ னங்கள் உள்ளிட்டவை, அமெரிக் காவின் பெடரல் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்களை சேர்த்து விசாரித்த நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா அச்சுறுத்தலால் அமல் படுத்தப்பட்ட பயண தடைகளை சுட்டிக்காட்டி, விசா வழங்கும் நடைமுறைகளை நிறுத்தி வைத்து உள்ளது சட்டவிரோதம். எனவே, விசா விநியோக நடைமுறைகளை நிறுத்தி வைத்து வெளியுறவுத் துறை பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment