'நீட்' தேர்வை ரத்து செய்க! - 'நீட்' விலக்கு கோரும் சட்டத்துக்கு ஒப்புதல் தருக!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

'நீட்' தேர்வை ரத்து செய்க! - 'நீட்' விலக்கு கோரும் சட்டத்துக்கு ஒப்புதல் தருக!!

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற மாணவர்கள் கைது

சென்னை,அக்.28- தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில அரசுகளின் இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சட்ட வரைவுக்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் அகில இந்திய அளவில் நீட் ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது.

கல்வியியல் செயல்பாட்டுக்கு எதி ராக தகுதி, திறமைகளை புறம்தள்ளி மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மாநில அரசுகளின் இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சட்ட வரைவுக்கு உட னடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட் டம் நடத்துவதற்காக சின்ன மலை ராஜீவ்காந்தி சிலை அருகில் மாணவர் சங்கத்தினர் திரண்டனர்.

நூற்றுக்கணக்கான மாணவ-மாண விகள் சாலையில் அமர்ந்து கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மாணவர்களிடையே அகில இந்திய மாணவர் சங்க பொதுசெயலாளர் மயூக் பிஸ்வாஸ் உரை நிகழ்த்தினார்.

இந்த போராட்டத்தை தமிழ்நாடு மாணவர் சங்கத்தலைவர் கண்ணன், மாநில செயலாளர் மாரியப்பன் ஆகி யோர் ஒருங்கிணைந்து நடத்தினார்கள். சென்னையில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் செல்லாதபடி காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். தடுப்பு வளையங்களும், பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப் பட்டு இருந்தன. அதனை மீறி மாணவ- மாணவிகள் அங்கிருந்து ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட் டனர். 

சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே சென்றபோது அவர்களை காவல்துறையினர் தடுத்து மறித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அனைவரும் காவல்துறை வேனில் ஏற்றப்பட்டு சமுதாயக்கூடத்திற்கு அழைத்து செல் லப்பட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பும் ஏற்பட்டது.

 

No comments:

Post a Comment