வாழ்வியல் சிந்தனையில் அப்துல்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

வாழ்வியல் சிந்தனையில் அப்துல்கலாம்

கடந்த 15.10.2021 அன்றுவிடுதலைநாளேட்டில் வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில்அப்துல்கலாம் என்ற அதிசய மாமனிதர்என்ற தலைப்பில் எழுதியிருந்ததை படித்தேன். டிசம்பர் 2009ஆம் ஆண்டில் அப்துல்கலாம் அய்யாவைப் பற்றி படித்திருந்தேன், உடனே எனக்கு அந்த ஞாபகம் வந்தது அதை விவரிக்க விழைகிறேன்.

அப்துல்கலாம் அய்யாவைப் பற்றி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதுகிறார், “இராமேஸ்வரத்தில் செய் தித்தாள் விநியோகிக்கும் பையனாகஉழைத்து அதில் கிடைத்த சொற்ப வருவாயைக் கொண்டு தனது படிப்பை பொறியியல் வரை முடித்தார் என்று! அவரது அயராத உழைப்பு, தளராத தன்னம்பிக்கை அவருக்கு கைகொடுத்தது. இந்தியாவின் சிறந்த விஞ்ஞானியாக பெயர் பெற்றார் என் றும் கூறியிருந்தார்.

இந்தியாவிற்கு அணுகுண்டு தயாரிக் கும் ஆற்றல் கொண்ட தொழில்நுட்ப மேதையாக வளர்ந்தார். உயர்ந்தார்! உலகின் 300 கோடி மக்களின் வறுமையை எப்படி ஒழிப்பது என்று நூலில் எழுதி யதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

தஞ்சை பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு - குடியரசுத் தலைவராக இருந்தபோதும், பதவியில் இல்லாத பொழுதும் கூட ஆறு முறை வந்து நம்மை ஊக் கப்படுத்திய செம்மல் அவர். ‘புராஎன்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தில் 69 கிராமங்களைத் தத்து எடுத்து கல்வி, சுகாதாரம், மின்னணு, பொருளாதாரம் பற்றி அவர் (அப்துல்கலாம்) கூறும் முன்பே 1948இல் பெரியார் கூறியது கண்டு அதிசயப்பட்டதோடுபெரியார் புராஎன்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

உலகின் எந்தப் பகுதிக்கு சென்றா லும் பெரியார்புராதிட்டத்தை எடுத்துக் கூறுவார் - பல நாட்டு நாடாளுமன்ற உரைகளில்!

பிறப்பது ஒரு சம்பவம்தான் என்றாலும், இறப்பதுதான் சரித்திரமாக அமைய வேண்டும் என்ற அளவுக்கு வாழ்ந்து காட்டுங்கள் என்றார் அப்துல் கலாம். அவரது கூற்றே அவருக்கு நாம்  வழங்கும் காணிக்கையும் பாராட்டும் ஆகும்!” என்று தமிழர் தலைவர் நமது ஆசிரியர் அய்யா முடிக்கிறார்.

இந்தப் பாராட்டு தந்தை பெரியா ரைத்தான்சாரும் என்று அய்யா அப்துல் கலாம் இருந்திருந்தால் கூறியிருப்பார்.

அப்துல்கலாம் பேசுகிறார்

நான் சென்னை குரோம்பேட்டை யில் உள்ள எம்.அய்.டி.யில் ஏரோ நாட்டிக்கல் பொறியியல் படித்துக் கொண்டிருந்த காலம் அது. அப் போது அப்ரண்டிஸ் பயிற்சிக்காக பட் டுக்கோட்டையில் உள்ள ஒரு மில்லில் இருந்தேன். ஒரு நாள் என்னுடைய சூப்பர்வைசராக இருந்த திரு. தட்சி ணாமூர்த்தி என்னை அவரது வீட்டில் இரவு விருந்துக்கு அழைத்தார். நானும் சென்றேன்.

அங்கே ஏகப்பட்ட கூட்டம், யாரோ ஒரு வி.அய்.பி. வந்திருக்கிறார் போலிருக்கிறது என்று நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது அந்த வி.அய்.பி. வேறு யாருமல்ல தந்தை பெரியார் என்று. என்னால் நம்பவே முடியவில்லை. அவர் மீது பெருமதிப்பு கொண்டவன் நான். என்றாவது   ஒரு நாள் அவரை சந்திப்போமா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். அந்த சந்தர்ப்பம் இப்படி திடீரென்று கிட்டும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை-

தந்தை பெரியார் உள்ளே இருந்த ஓர் அறையில் அமர்ந்திருந்தார். செக் கச்செவேலென்ற தேகம், வெண்தாடி, வட்டக் கண்ணாடிக்குள்  ஒளிவீசும் கண்கள், ஒரு துண்டை உடலின் மேல் போர்த்தியிருந்தார். தந்தை பெரியா ரைத் தான் பார்க்கிறேன் என்பதையே என்னால் நம்ப முடிய வில்லை. அவ ரையே பிரமித்தப்படி பார்த்துக் கொண் டிருந்தேன்.

என்னைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ அருகில் வருமாறு அழைத்தார். பழம் நழுவிப் பாலில் விழுவது போல் இருந்தது எனக்கு. அவரிடம் சென்றேன், நான் யார் - என்ன படிக்கிறேன் என்றெல்லாம் விசாரித்தார். நான் பதில் சொன்னதும் அவர் முகத் தில் ஒரு திருப்தி, அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் என்றைக்கும் பசுமரத்தாணிப் போல் என் மனதில் பதிந்து விட்டது.

அந்த வார்த்தைகள்

தம்பி அப்துல்கலாம் - நீ படித்துக் கொண்டிருக்கும் இடம் நல்ல இடம். உனக்கு இந்தப் படிப்பு ரொம்ப முக்கிய மானது. இப்போதைக்கு உன்னுடைய பொறுப்பு நன்றாகப் படிக்க வேண்டும் என்பதுதான். அதில் மட்டுமே கவ னத்தை செலுத்தி, படிப்பு முடியும் வரை அரசியலில் கூட கவனம் கொள்ளாதே. நீ நன்றாக படித்து முடிப்பதுதான் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு நீ அளிக் கக்கூடிய முக்கியமான பங்கு”.

இந்த வார்த்தைகள் அவர் இன்று சொன்னாற்போல் எனக்குள் துல்லியமாக ஒலிக்கிறது. எத்தனை தெளிவான, தீர்க்க தரிசனத்துடன் கூடிய வார்த்தைகள், அதனால் தான் அவர் தந்தை பெரியார் என்று அழைக்கப்படுகிறார்.

நல்ல கல்வியைக் கற்று அறிவைப் பெற்ற இளைய சமுதாயத்தின் தொண்டு தான் நாட்டின் அளப்பரிய சொத்து, அதைத்தான் அவர் குறிப்பிட்டார்

என்றுநக்கீரன்டிசம்பர் - 2009 இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பொழுது அப்துல்கலாம் குறிப் பிட்டிருந்தார்.

- .இரணியன்

திருமுல்லைவாயில்

No comments:

Post a Comment