வாசிங்டன், அக். 13- ஆப்கா னிஸ்தானில் ஆட்சி மாற் றம் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளும், அமெ ரிக்க அரசின் மூத்த அதி காரிகளும் கடந்த 9-ஆம் தேதி கத்தார் தலைநகர் தோகாவில் சந்தித்து பேசி னர். அதன் தொடர்ச்சியாக இருதரப்புக்கும் இடை யில் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தநிலையில் தலி பான்களுடனான பேச்சு வார்த்தை நேர்மறையாக அமைந்ததாகவும் எனினும் தலிபான்களின் செயல்பாடுகள் மூலமே அவர்கள் மதிப்பிடப்படு வார்கள் என்றும் அமெ ரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெ ரிக்க வெளியுறவு அமைச் சகத்தின் செய்தி தொடர் பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘தலிபான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையிலான பேச்சு வார்த்தை நேர்மறையா கவும், தொழில் ரீதியாக வும் அமைந்தது. ஆப்கா னிஸ்தான் சமூகத்தின் பல்வேறு அம்சங்களில் பெண்களின் பங்கேற்பு உட்பட பாதுகாப்பு பிரச் சினைகள் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்டவற் றில் இந்த பேச்சுவார்த்தை கவனம் செலுத்தியது’’ என கூறினார். ஆப்கா னிஸ்தான் மக்களுக்கு நேரடியாக அமெரிக்கா வின் மனிதாபிமான உத விகளை வழங்குவது பற்றி யும் இரு தரப்பினரும் விவாதித்ததாக நெட் பிரைஸ் கூறினார்.
மேலும் அவர் "பேச்சு வார்த்தை சுமுகமாக அமைந்தாலும், தலிபான் களின் செயல்பாடுகள் மூலமாகவே அவர்கள் மதிப்பிடப்படுவார்கள், அவர்களின் வார்த்தைக ளால் அல்ல என்பதை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்துகிறது’’ என தெரிவித்தார்.
No comments:
Post a Comment