ஆளும் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு உத்தரகண்ட் பா.ஜ.க. அமைச்சர் காங்கிரசில் இணைந்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

ஆளும் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு உத்தரகண்ட் பா.ஜ.க. அமைச்சர் காங்கிரசில் இணைந்தார்

டேராடூன், அக்.15 உத்தர கண்ட் மாநில போக்கு வரத்துத் துறை அமைச்சா யஷ் பால் ஆர்யா , அவரது மகனும், சட்டமன்ற உறுப்பினருமான சஞ்சீவ் ஆகி யோர் ஆளும் பாஜகவில் இருந்து விலகி எதிர்க்கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளனர்.

மேலும், அவர்கள் இரு வரும் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினர்.

இதே உத்தரகண்ட் மாநி லத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்புதான், ஹரீந்தா சிங் என்ற மூத்தத் தலைவர், பாஜகவிலி குந்து விலகி காங் கிரசில் இணைந்தார். தற் போது போக்குவரத்து அமைச் சராக இருக்கும் யஷ்பால் ஆர்யாவும் பாஜகவிலிருந்து விலகியிருப் பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை, டில்லியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய யஷ்பால் ஆர்யாவும், அவரது மகன் சஞ்சீவும், பின் னர் கட்சியின் மூத்த தலைவர் கள் ஹரீஷ் ராவத், கே.சி. வேணுகோபால், தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன் தீப் சிங் சுர்ஜேவாலா ஆகி யோர் முன்னிலையில் தங் களை காங் கிரசில் இணைத்துக் கொண்டனர்.

கடந்த 2007 முதல் 2014-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி யின் மாநிலத் தலைவராக இருந் தவர்தான் யஷ்பால் ஆர்யா.. கடந்த 2017-ஆம் ஆண்டு பாஜக வுக்குத் தாவிய அவர், தற்போது மீண்டும் காங் கிரசுக்கே திரும்பி யுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் 2022 துவக்கத்தில் சட்டப் பேர வைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவரே கட்சி மாறி யிருப்பது, பாஜக-வுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment