ஏர் இந்தியா ஊழியர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

ஏர் இந்தியா ஊழியர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை

புதுடில்லி அக் 15 ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவன ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஒன்றிய அரசின்  விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் கடும் இழப்பைச் சந்தித்து வந்தது.  ஒன்றிய அரசால் ஏர் இந்தியா நிறுவனத்தை இந்த இழப்புடன் நடத்த முடியவில்லை எனத் தெரிவித்து அதை முழுவதுமாக தனியாருக்கு விற்பனை செய் யத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் உள் ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   ஆயினும் அதை கருத்தில் கொள்ளாமல் விற்பனை செய்வதில் மும்முரம் காட்டியது.  ஏர் இந்தியா நிறு வனம் தற்போது டாடா குழு மத்துக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது.

இந்நிறுவனம் துவக்கத்தில் டாடா குழும நிறுவனமாக இருந்தது..  அதன் பிறகு அரசு டைமை ஆக்கப்பட்டது.  தற் போது மீண்டும் டாடா குழு மத்திடமே கை மாறி உள்ளது.  இங்கு  பணி புரியும் ஊழியர் களுக்கு இருப்பிட வசதி ஏர் இந்தியா நிறுவனத்தால் அளிக் கப்பட்டிருந்தது.. தற்போது நிர்வாகம் மாறி உள்ள நிலை யில் ஊழியர்கள் அவரவருக்கு அளிக்கப்பட்டுள்ள இருப்பி டத்தை காலி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.  இது ஊழியர்களுக்கு கடும் துய ரத்தை அளித்துள்ளது.  இதை யொட்டி ஏர் இந்தியா நிறுவன ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளன.

 

No comments:

Post a Comment