கரோனா காலகட்டத்திலும் இந்திய பெருமுதலாளிகள் வருவாய்க் கொள்ளை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

கரோனா காலகட்டத்திலும் இந்திய பெருமுதலாளிகள் வருவாய்க் கொள்ளை!

பட்டியலை வெளியிட்டதுபோர்ப்ஸ்பத்திரிகை!

புதுடில்லி, அக். 9  கரோனா நெருக்கடியிலும், அம்பானி, அதானி உள்ளிட்ட இந்தியப் பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 50 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாகபோர்ப்ஸ்பத்திரிகை கூறியுள்ளது. 

போர்ப்ஸ்பத்திரிகையானது ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலானமுதல் 100’ பெரும்பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டிற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 9 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேலும், 2008 முதல் தொடர்ந்து 14 ஆவது ஆண்டாக முதலிடத்தைக் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

அம்பானியை தொடர்ந்து பிரதமர் மோடி யின் நண்பர் கவுதம் அதானி 7 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 2 ஆவது இடத்தையும்,

எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் 3 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தையும்,

2 லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன்டி-மார்ட்நிறுவனர் ராதாகிருஷ்னன் தமானி 4 ஆவது இடத்தையும்,

ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனாவாலா 5 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

லட்சுமி மிட்டல், (ரூ. 1.88 லட்சம் கோடி), சாவித்ரி ஜிண்டால் (ரூ. 1.80 லட்சம் கோடி), உதய் கோட்டக் (ரூ. 1.65  லட்சம் கோடி), பலோன்ஜி மிஸ்திரி  (1.64 லட்சம் கோடி), குமார் பிர்லா  (1.58 லட்சம் கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

இதில், குறிப்பிட வேண்டியது, இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை விட  50 சத விகிதம் அளவுக்கு அதிகரித்திருப்பது ஆகும்.  பட்டியலில் இடம் பெற்றுள்ள பணக்காரர்களில் 80  சதவிகிதம் பேரின் வருவாய், கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 61 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 7,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான உயர்வைக் கண்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 30 ஆயிரம் கோடி ரூபாயும், அதானியின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை விட 200 சதவிகிதம் அளவுக்கும் அதிகரித்துள்ளது.

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள முதல் 100 இந்திய பெரும்பணக்காரர்கள் பட்டியலில் .பி.ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த சாவித்திரி ஜிண்டால், ‘ஹேவல்ஸ் இந்தியாவைச் சேர்ந்த வினோத் ராய் குப்தா, யுஎஸ்வி பிரைவேட் லிமிடெட்டின் லீனா திவாரி, பைஜூஸ் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத், பயோகானின் கிரண் மஜூம்தார் ஷா, டிராக்டர்கள் அண்ட் ஃபார்ம் எக்விப்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் மல்லிகா சீனிவாசன் என முதன்முறையாக 6 பெண் முதலாளிகளும் இடம்பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment