தைபே, அக். 12- கிழக்காசியாவில் உள்ள தைவானை, அண்டை நாடான சீனா, தொடர்ந்து உரிமை கொண் டாடி வருகிறது. எனினும் தைவான் நாட்டு தலைமை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் தைவான் நாட்டின் தேசிய தின விழாவில், அதிபர் சாய் இங்வென் கூறுகையில், “தைவானில் தற்போது இருக்கும் சூழல் தொடர்ந்து நீடிக்கும். எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எங்கள் நாட்டை பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்,” என்றார்.
தடுப்பூசி ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை
பால்டிமோர், அக். 12- கடந்த 1987இல் மலேரியாவுக்காக, 'மாஸ்குயிரிக்ஸ்' என்ற தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. பின் அதை மேம்படுத்தி பரிசோதிக்கும் பணிகள் நடந்தன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்த மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும், மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படும் ஆப்ரிக்க குழந்தைகளுக்கு, இந்த தடுப்பூசி பேருதவியாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் நாடாளுமன்ற தேர்தல்
பாக்தாத், அக். 12- மேற்காசிய நாடான ஈராக்கில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடப்பதாக இருந்தது. எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் கிளர்ச்சி அதிகரித்ததால், அதை கருத்தில் வைத்து, தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்தது.
No comments:
Post a Comment