அமீரக துணை அதிபரிடம் ஏழு நாடுகளின் புதிய தூதர்கள் ஆவணங்கள் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

அமீரக துணை அதிபரிடம் ஏழு நாடுகளின் புதிய தூதர்கள் ஆவணங்கள் அளிப்பு

துபாய், அக். 12- துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை அதி பர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிடம் அமீரகத்துக்கான 7 நாடுகளை சேர்ந்த புதிய தூதர்கள் நேரடியாகவும், காணொலி மூலமாகவும் தங்கள் சான்று ஆவணங் களை அளித்தனர்.

பல்வேறு நாடுகளின் தூதர்கள் பொறுப்பேற் கும்போது அவர்கள் தங் கள் நாட்டில் இருந்து அளிக்கப்பட்ட நியமனத் திற்கான சான்று ஆவ ணத்தை அதிபர் அல்லது அதற்கு இணையான பொறுப்பில் உள்ளவர் களிடம் ஒப்படைத்து பணியாற்ற வேண்டும் என்ற மரபு பின்பற்றப் பட்டு வருகிறது. அமீரகத் திலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அதன்படி அமீரகத் துக்கு ஜோர்டான், ஸ்பெ யின், டிஜிபவுட்டி, ஜிம் பாவே, கம்போடியா, ஹாண்டுராஸ், பூட்டான் ஆகிய 7 நாடுகளுக்கான புதிய தூதர்கள் பதவி ஏற்றனர். இதற்காக துபாய் எக்ஸ்போ 2020 கண் காட்சி வளாகத்தில் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், ஜோர்டான் நாட்டு தூதர் நாசர் ஹபஸ்னா, ஸ்பெயின் நாட்டு தூதர் இனிகோ டி பலசியோ, டிஜிபவுட்டி நாட்டிற் கான தூதர் மவுசா முகம் மது அகமது, ஜிம்பாவே தூதர் லவ்மோர் மசேமோ ஆகியோர் தங்கள் பணி நியமனத்திற் கான சான்று ஆவணத்தை துணை அதிபர் ஷேக் முகம் மது பின் ராஷித் அல் மக்தூ மிடம் அளித்து வாழ்த்து பெற்றனர்.

அதேபோல அமீரகத் தில் வசிக்காத வெளி நாட்டு தூதர்களாக கம் போடியாவுக்கான தூதர் ஹுன் ஹான், ஹண்டு ராஸ் நாட்டு தூதர் லுயிஸ் அலோன்சோ வெலஸ்குவிஸ் மற்றும் பூட்டான் நாட்டு தூதர் சித்தன் டென்ஜின் ஆகி யோர் காணொலி மூலம் அவரவர் நாட்டில் இருந்த படியே சான்று ஆவணங் களை அளித்து உறுதி மொழி ஏற்றனர்.

இதனை பெற்றுக் கொண்ட துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கூறுகையில், ‘நட்பு நாடு களின் தூதர்களை வர வேற்கிறேன். அவர்களது பணிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப் பையும் அமீரகம் செய்து தரும். பெருந்தொற்று காலத்திற்கு பிந்தைய இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய வாய்ப் புகளை பயன்படுத்தி அடுத்த நிலைக்கு இரு தரப்பு உறவுகளையும் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பணியில் வெற்றிபெற வாழ்த்துகள்என்றார்.

இந்த நிகழ்ச்சியில் துபாய் பட்டத்து இள வரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், துணை ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் முகம் மது பின் ராஷித் அல் மக்தூம், அமீரக உள் துறை அமைச்சர் ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான், அமீரக வெளி யுறவு மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான அமைச்சர் ஷேக் அப் துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment