கொழும்பு, அக். 12- இலங்கை யின் 72-ஆவது ராணுவ தினவிழா அனுராதபுரத் தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கலந்து கொண்டார்.
கரோனா நோயை கட்டுப்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம். இதனால் நாட்டை முடக் குதல், பல்வேறு தடைகள் போன்றவை ஏற்படுத்தப் பட்டன. இதன் காரண மாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதற்காக நான் நியாயம் கூறப் போவது இல்லை. ஆனா லும் இதை முறியடித்து வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செல்கிறோம்.
மக்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை என்பதால் என் மீதும், இந்த ஆட்சி மீதும் மக் கள் வெறுப்பு அடைந்து இருப்பதை நான் உணர்கி றேன். அந்த வெறுப்பை நான் ஏற்றுக் கொள்கி றேன்.
ஆனாலும் நாட்டை புதிய உத்வேகத்துடன் அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வோம். புதிய அரசியல் அமைப்பு, புதிய தேர்தல் முறை அடுத்த வருடத்துக்குள் உருவாக்கப்படும். ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற உறுதிமொழியும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு கோத்தபய ராஜபக்சே கூறினார்.
No comments:
Post a Comment