அய்.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை
நியூயார்க், அக். 12- -பயங்கர வாதம் குறித்து அய்.நா., பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கை யில், சிறுபான்மையின ருக்கு எதிரான வன்முறை கள் குறித்த இந்தியாவின் கருத்துக்களும் இடம் பெற்று உள்ளன.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் மசூதியில் நடத்தப்பட்ட தற் கொலைப் படை தாக்கு தலில், 150க்கும் மேற்பட் டோர் உயிர்இழந்தனர். இந்த தாக்குதலுக்கு அய். எஸ்., பயங்கரவாத அமைப் பினர் பொறுப்பேற்ற னர். இந்நிலையில் அந்த பயங்கரவாத தாக்குத லுக்கு கண்டனம் தெரிவித்து, அய்.நா., பாது காப்பு கவுன்சிலின், 15 உறுப்பு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன.
அந்த அறிக்கையில் கூறப்ப ட்டுள்ள தாவது: ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு தலங்களில் கொடூரமான தாக்குதல் கள் தொடர்ந்து நடத் தப் பட்டு வருகின்றன.சமீபத் தில் மசூதியில் அய்.எஸ்., பயங்கரவாதிகள் நடத் திய கோழைத்தமான தற் கொலைப்படை தாக்குத லுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பன் னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத் தலாக இருக்கும் பயங்கர வாதத்தை அய்.நா., பாது காப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் தொடர்ந்து எதிர்க்கும்; அது மிகப் பெரிய குற்றம்; அதை ஒரு போதும் ஏற்கமாட் டோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அய்.நா., பாதுகாப்பு கவுன்சிலின் இந்த அறிக் கையில் சிறுபான்மையி னருக்கு எதிரான வன் முறைகள் குறித்த இந் தியாவின் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை நீர்த்துப்போக செய்ய சிலர் முயற்சித்த தாகவும், எனினும் அந்த அறிக்கையில் தங்கள் கருத்து இடம் பெற வேண்டியதில், இந்தியா உறுதியாக இருந்ததாக வும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment