‘பயோ டெக்னாலஜி’ படிப்பிற்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்படியே மாணவர் சேர்க்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

‘பயோ டெக்னாலஜி’ படிப்பிற்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்படியே மாணவர் சேர்க்கை

உயர்கல்வித் துறை அமைச்சர் .பொன்முடி பேட்டி

சென்னை, அக்.12- நடப்பு ஆண்டில்பயோ டெக்னாலஜிபடிப்பிற்கு 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப் படையில் மாணவர் சேர்க்கை நடத் தப்படும் என உயர்கல்வித்துறை அமைச் சர் .பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயல கத்தில் அமைச்சர் .பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொறியியல் கலந்தாய்வை பொறுத்தவரை இந்த ஆண்டில் எந்தக் கல்லூரிகளிலும் காலி இடங்கள் இருக்காது. முதல் 2 சுற்றுகளின் முடிவில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 10 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். எனவே பெரும்பாலும் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பது உண்மை.

அதுமட்டுமில்லாமில்பயோ டெக்னாலஜி' படிப்பிற்கு கடந்த ஆண்டில் 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு அப்போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். அதனடிப் படையில் இந்த ஆண்டும்பயோ டெக்னாலஜி' படிப்பிற்கு தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அந்தவகையில்பயோ டெக்னாலஜிபடிப்பிற்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடி தம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசு நிதி வழங்காவிட்டாலும் சரிபயோ டெக்னாலஜி' படிப்பிற்கு தேர்வுகளின் அடிப்படையில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்படிதான் சேர்க்கை நடத் தப்படும். நடப்பு கல்வி ஆண்டில் பொருளாதார இடஒதுக்கீடு பின்பற்றப் படவில்லை.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின்படி தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. சமூகநீதி, இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் உறுதியாக உள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டிற்கு கிராமப் புறங்களில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டின்படி 11,047 இடங்கள் இருக்கும் நிலையில் இதுவரை 5,970 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். அடுத்தடுத்த கட்ட கலந்தாய்வுகளிலும் அரசு பள்ளி மாணவர்கள் உள் ஒதுக்கீட்டின் அடிப்ப டையில் சேர்க்கை பெறுவார்கள். காலி இடங்களை நிரப்புவதற்காக தேவைப்பட்டால் கூடுதல் சுற்று கலந் தாய்வு நடத்தப்படும். பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

- இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment