தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (28.10.2021) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித்துறையின் சார்பில் அரசு கலைக் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அறிவியல் மய்யம் ஆகியவற்றில் 102 கோடியே 94 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், பல்நோக்குக் கூடம், கூட்டரங்கம், புத்தாக்க மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் க. லட்சுமி பிரியா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment