வங்காளதேசத்தின் நன்மதிப்பை கெடுக்க முயற்சி -பிரதமர் ஹசீனா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

வங்காளதேசத்தின் நன்மதிப்பை கெடுக்க முயற்சி -பிரதமர் ஹசீனா குற்றச்சாட்டு

டாக்கா, அக். 26- வங்காள தேசத்தில் இஸ்லாமியர்க ளின் புனித நூலான குரானை அவமதிக்கும் வகையிலான ஒளிப்படம் முகநூலில் பரவியதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. துர்கா பூஜையின்போது ஏராளமான ஹிந்து கோவில்கள் உடைக்கப் பட்டன, இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்துக்கள் பலர் தாக்கப் பட்டனர். வன்முறைக்கு 8 பேர் பலியாகினர்.

வன்முறையில் ஈடுபட் டவர்கள், வன்முறைக்கு காரணமானவர்கன் என சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை பிரத மர் ஷேக் ஹசீனா வன் மையாக கண்டித்தார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிவித் தார்.

இந்நிலையில்,  வங்கா ளதேசத்தின் நன்மதிப் பைக் கெடுக்கவும், மதரீதியில் பிளவை உருவாக்க வும், சுயநலன் கொண்ட சில தரப்பினர் பிரச்சாரத் தைப் பரப்புவதாக பிரத மர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டி உள்ளார்.

வங்காளதேசத்தை பின்னோக்கி கொண்டு செல்ல யாராலும் முடி யாது. எப்போதாவது நாம் பார்க்கும் சில சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட் டவை ஆகும். வேண்டு மென்றே இவ்வாறு செய் வதால்  நாட்டின் நற்பெய ருக்கு களங்கம் ஏற்படுகி றது, எனவும் ஷேக் ஹசீனா கூறினார். ஆனால், யாரு டைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.

No comments:

Post a Comment