சங்பரிவார்களிடம் சரண் அடைகிறதா கருநாடகா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

சங்பரிவார்களிடம் சரண் அடைகிறதா கருநாடகா?

பல்வேறு மாநிலங்ககளிலும் பொது இடங்களில் ஆக்கிரமித்துச் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ள வழிபாட்டிடங்களை அந்தந்த மாநில அரசுகள் இடித்துத் தள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர்  திங்கள் 29 ஆம் நாள் ஆணையிட்டிருந்தது

What SC said

On September 29, 2009, the Supreme Court had directed that henceforth no unauthorised construction should be permitted in the name of temple, mosque, church or gurudwara on public streets, public parks or other public places, and directed State governments and Union Territories to review the unauthorised construction of religious nature, which had already taken place on public streets, public parks and other public places, on ‘a case-to-case basis’ and take appropriate steps as expeditiously as possible. Chief Secretaries, in consultation with the respective State governments, were directed to frame a policy with respect to unauthorised construction of religious nature that existed prior to September 2009.

மாநில உயர்நீதி மன்றங்கள் இந்தத் தீர்ப்புக் குறித்த மேல் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தவறும் பட்சத்தில் மாநில அரசு செயலாளர்கள் நேரில் வந்து விளக்கம் தர வேண்டும் என்பது உச்சநீதிமன்ற ஆணை.

அதன் அடிப்படையில் கருநாடக உயர் நீதிமன்றம் இந்த ஆண்டு செப்டம்பர் திங்களில் உச்ச நீதிமன்றத்தின் ஆணையைக் கருநாடக அரசு நிறைவேற்றிட வேண்டுமென்று அறிவுறுத்தியது.

2021 ஜூலை 15 முதலாக ஒவ்வொரு மாவட்டத்திலும்  அவ்வாறு கட்டப்பட்ட வழிபாட்டிடம் ஒன்றாவது இடிக்கப்பட வேண்டுமென்று, இந்த ஆண்டு ஜூலை முதல் நாளன்று, கருநாடக அரசின் தலைமைச் செய லாளர் மாவட்ட ஆணையர்களுக்கு அறுவுறுத்திக் கடிதம் எழுதியுள்ள தாகவும் ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளும் இவ்வாறே அறுவுறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, முதல் நடவடிக்கையாக, மைசூரு மாவட்ட அதிகாரிகள் நஞ்சன்கூடு என்னும் ஊரில் பொது இடத்தில் கட்டப்பட்டிருந்த  ஒரு கோயிலை இடித்துவிட்டனர். எடியூரப்பா பதவி விலகிய நிலையில் பசவராஜ் பொம்மை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபோது நிகழ்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

உடனே ஹிந்து அமைப்பினர், சங்க் பரிவாரத்தினர் கூக்குரலிடத் தொடங்கிவிட்டனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் இறங்கினர்.

கோயிலை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் குரல் எழுப்பினர். 

இடிப்பதை நிறுத்தி வைக்கும்படி முதலமைச்சர் பொம்மை கூறி யுள்ளார்.

 நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் நடவடிக்கையை மேற்கொண்ட மைசூரு நகராண்மைக் கழகம், மாவட்டத்தில் 93 இடங்களில் வழிபாட்டிடங்கள் விதியை மீறிக் கட்டப்பட்டுள்ளதாகக் கண்டறிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஹிந்து மகாசபையின் தலைவர் தர்மேந்திரா என்பவர் மிரட்டுகிறார்.

நஞ்சன்கூடு கோயில் இடிக்கப்பட்ட செய்தியை அறிந்த ஹிந்து மகா சபையின் தலைவர் தர்மேந்திரா, "ஹிந்துக்களைக் காப்பாற்றுவதற்காக காந்தியையே விட்டு வைக்காமல் கொன்ற நாங்கள் உங்களை விட்டு வைப்போம் என்று நினைக்கிறீர்களா?" என்று முதலமைச்சரை மிரட்டி யுள்ளார்.

"சித்திரதுர்கா, தென் கன்னடா, மைசூரு மாவட்டங்களில் கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன.இங்கு யாருடைய ஆட்சி நடைபெறுகிறது? இது காங்கிரசு ஆட்சியில் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்? ஹிந்து மகா சபை இருக்கும் வரையில் கோயில்களை இடிப்பதைத் தடுத்தே தீருவோம்" என்றும் கூறியுள்ளார்.

கருநாடகத்தில் பொது இடங்ககளில் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ள அனைத்து மத வழிபாட்டிடங்களையும் பாதுகாத்திட  மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், கர்நாடக மத வழிபாட்டி டங்கள் பாதுகாப்புச் சட்டம் 2021  வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது. கரு நாடகத்தின் இரு அவைகளும் ஏற்றுக் கொண்ட பிறகு சட்டம் நடை முறைக்கு வருமாம்.

பொது இடங்களில் புதிதாகக் கட்டப்படும் வழிபாட்டிடங்களுக்கு இசைவு வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள், தீர்ப்புகள், நீதிமன்ற ஆணைகள் ஆகியவற்றைப் புறக்கணிக்கும் வகையில் இந்தச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சட்டம் நடைமுறைக்கு வரும்போது எந்தெந்த வழிபாட்டிடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பது வரையறுக்கப்படும் என்றும் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கும் வழிபாட்டிடங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் படி. மாநிலத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான 2009க்குப் பிறகு  விதி மீறிக் கட்டப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள், புத்த விகாரங்கள், போன்ற மத வழிபாட்டிடங்கள் இடிக்கப்படாமல் தப்பிக்கும் என்று கூறப்படுகிறது.

சட்டம் என்ன சொல்லுகிறது? நீதிமன்ற தீர்ப்புகள் என்ன சொல்லுகின்றன என்பது முக்கியம் இல்லையா?

தங்களுக்குச் சாதகமாக இருக்கும் பிரச்சினைகளில் மட்டும் நீதிமன்ற தீர்ப்பைக் கையில் எடுத்துக் கொள்ளும் காவிகள், சனாதன போர்வையில் செயல்படும் சங்பரிவார்கள் தங்களுக்குச் சாதகம் இல்லாத நிலையில், அரசின் சட்டங்களையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் தூக்கியெறிவது எந்த வகையில் சரி?

450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள். இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டக் கூடியவர்கள். ஒரு பிரதமரே, ராமன் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் நாடு எங்கே செல்லுகிறது என்பதை நினைத்தால் குலை நடுங்குகிறது.

சமூகநீதியும் மதச் சார்பின்மையும் நாட்டின் இரு கண்கள் அவற்றை முடக்கினால் நாடு பாசிசத்தின் மேய்ச்சல் தரையாக மாறி விடும் - வெகு மக்கள் உணரட்டும் - போர்க் கொடியை உயர்த்தட்டும்!

No comments:

Post a Comment