சீன கப்பல்-கொழும்பு துறைமுகத்தில் நுழையத் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

சீன கப்பல்-கொழும்பு துறைமுகத்தில் நுழையத் தடை

கொழும்பு, அக். 26- இலங்கை சீனாவிடம் இருந்து 63 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.472 கோடி) செலவில் 99 ஆயிரம் டன் இயற்கை உரம் வாங்க முடிவு செய்திருந்தது.

எனினும் சீன நிறுவ னத்திடம் இருந்து இறக் குமதி செய்யப்படும் குறிப் பிட்ட அந்த இயற்கை உரத்தை ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் அதில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருப் பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சீன நிறுவனத்திடமிருந்து 99 ஆயிரம் டன் இயற்கை உரம் வாங்கும் திட்டத்தை இலங்கை அரசு ரத்து செய்தது. ஆனால் உரம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே 20 ஆயிரம் டன் இயற்கை உரத்துடன் சீன கப்பல் இலங்கை நோக்கி புறப் பட்டது. இந்த கப்பல் அக்டோபர் 22-ஆம் தேதி கொழும்பு துறைமுகம் வந்து சேரும் என தெரி விக்கப்பட்டது. இலங்கை அரசு உரம் வாங்கும் திட்டத்தை ரத்து செய்தத தால் அந்த கப்பல் இலங் கையின் மலாகா ஜலசந்தி யில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அசுத்த மான இயற்கை உரத்து டன் இருக்கும் சீன கப் பலை கொழும்பு துறை முகத்துக்குள் அனுமதிக் கக்கூடாது என துறைமுக நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் அந்த கப்பலை சீனாவுக்கு திருப்பி அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகவும் தக வல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சீனாவுக்கு பதிலாக இந்தியாவில் இருந்து உரத்தை இறக்கு மதி செய்ய இலங்கை அரசுதீர்மானித்து உள்ளது.

 

No comments:

Post a Comment