வாசிங்டன்-, அக். 26- சிறு வயது முதல், அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றது வரையிலான கமலா ஹாரிசின் (வயது 57) வாழ்க்கையை விளக்கும் வகையில் எழுதப்பட் டுள்ள புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.
இதில் கமலா அய்யர் என்ற பெயர், கமலா ஹாரிசாக மாறியது; இட்லி, தோசை மீதான அவரது விருப்பம் போன்ற விட யங்கள் இடம் பெற்றுள் ளன. அமெரிக்க துணை அதிபராக இந்தாண்டு ஜனவரியில் பதவியேற் றார் கமலா ஹாரிஸ். ஆப்ரிக்க தந்தை, இந்திய தாய்க்கு பிறந்த அவர், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற் றுள்ளார்
கமலா ஹாரிசின் வாழ்க்கையை விளக்கும் வகையில், இந்தியாவை பூர்வீகமாக உடைய பிரபல பத்திரிகையாளர் சித்தானந்த ராஜ்கட்டா ஒரு புத்தகத்தை எழுதி யுள்ளார். மொத்தம், 300 பக்கங்கள் உடைய இந்த புத்தகம், இம்மாத இறுதி யில் வெளியாக உள்ளது.
கமலா ஹாரிசின் தாய் சியாமளா கோபாலன் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர். படிப்பதற்காக அமெ ரிக்கா சென்ற அவர், உடன் படித்த ஆப்ரிக்காவைச் சேர்ந்த டொனால்டு ஹாரிசை திருமணம் செய் தார். அதே காலகட்டத் தில் ராஜ்கட்டாவின் தந் தையும் அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்றார்.
சியாமளா கோபால னின் அமெரிக்க வாழ்க் கையில் துவங்கி, கமலா ஹாரிசின் சிறு வயது அனு பவங்கள், அவருடைய விருப்பங்கள் உள்ளிட் டவை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.கமலா ஹாரிஸ் பிறந்த போது அவரது பிறப்பு சான்றிதழில், முதலில் கமலா அய்யர் ஹாரிஸ் எனக் குறிப்பிடப்பட்டி ருந்தது. பின் அது கமலா தேவி ஹாரிஸ் என மாற் றப்பட்டுள்ளதாக புதிய தகவலும் இந்த புத்தகத் தில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
கமலாவின் சமையல் விருப்பம், இட்லி, தோசை மீதான காதல் போன்ற சுவாரஸ்ய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அரசியலில் வெற்றி பெற பெண்கள் சந்திக்கும் பிரச் சினைகள், போட்டிகள் குறித்து கமலா ஹாரிஸ் கூறியுள்ளவையும் இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment