ஏமனில் சவுதி போர் விமானங்கள் தாக்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

ஏமனில் சவுதி போர் விமானங்கள் தாக்குதல்

மாரிப், அக். 26-  ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர்இந்த நிலையில், அவர்களை கட்டுப்படுத்த சவுதி தலைமையிலான கூட்டணி படையினர் போரில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள மாரிப் பகுதியில் சவுதி தலைமையிலான கூட்டணி படை யின் போர் விமானங்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காக கொண்டு குண்டுகளை பொழிந்து வருகின்றனஇதனால் அந்தப் பகுதியில் அவர்களுடைய ஆதிக்கம் குறைந்து வருகிறது.

அவர்கள் முன்னேறி செல்வதும் தடுக்கப்பட்டு உள்ளது.  கடந்த சில நாட்களில் கிளர்ச்சியாளர்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர் என உள்ளூர் ராணுவம் தெரிவித்து உள்ளது.

பெண்ணின் காதிற்குள் உயிரோடு இருந்த சிலந்தி அகற்றம்

பெய்ஜிங், அக். 26- தெற்கு சீனாவின் ஹுனான் மாகாணத் தில் உள்ள சூஜோவைச் சேர்ந்த யி என்ற பெண், காதிற் குள் விசித்திரமான சத்தம் கேட்டதாலும் அசவுகரியம் ஏற்பட்டதாலும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவரது காதிற் குள் உயிரோடு சிலந்தி இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச் சியடைந்துள்ளார்.

அவரது காதிற்குள் ஒரு கேமராவை வைத்து பார்த்த போது, அந்த சிலந்தி லென்ஸை நோக்கி வந்துள்ளது. மேலும், அதன் அளவு மிகவும் பெரியதாக இருந்ததாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் காதிற்குள் சிலந்தி ஏறக்குறைய ஒரு இரவு முழுவதும் இருந்துள்ளது. மின்சார ஓட்டோஸ் கோப்பைப் பயன்படுத்தி சிலந்தியை அவரது காதிலி ருந்து மருத்துவர் அகற்றியுள்ளார்.

 

No comments:

Post a Comment