அரசு மருத்துவமனையில் முதல்முறையாக சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

அரசு மருத்துவமனையில் முதல்முறையாக சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை

சென்னை, அக். 25- தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவ மனையில் 11 வயது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பேரனுக்காக தனது ஒரு சிறு நீரகத்தை பாட்டி கொடை அளித்தார்.

தாம்பரம் அடுத்த பெருங் களத்தூரை சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி. இவர்களின் மூத்த மகன் அக்சயராஜ் (வயது 11). 2013ஆம் ஆண்டு முதல் நாள்பட்ட சிறுநீரக பிரச்சி னையால் பாதிக்கப்பட்ட சிறு வனுக்கு மாத்திரை, மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. 2019ஆம் ஆண் டில் திடீரென்று சிறுநீரகங்கள் செயலிழந்ததால் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு சிறுவன் சென்றான்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் டயாலிசிஸ் செய்து வந்த சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட் டுமே நிரந்தர தீர்வாக இருந் தது. சிறுவனின் தந்தையின் தாயான (பாட்டி) 65 வயதான மணிமேகலை தனது ஒரு சிறு நீரகத்தை பேரனுக்கு கொடை யாக வழங்க முன்வந்தார்.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி சிறுநீரக மருத்துவத் துறை மருத்துவர் பலராமன், சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார் மற்றும் மருத்துவர்கள் மாலதி, வேல்முருகன், சரவணன், மயக்க மருத்துவர் கிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ஒரே நேரத்தில் பாட்டியிடம் இருந்து ஒரு சிறுநீரகத்தை எடுத்து பேரனுக்கு வைத்தனர்.

அறுவை சிகிச்சைக்குப்பின் மருத்துவர்களின் தீவிர கண் காணிப்பில் இருந்த சிறுவன் தற்போது நலமுடன் இருக்கி றார். தனியார் மருத்துவமனை யில் ரூ.15 லட்சம் வரை செல வாகும் இந்த மாற்று அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய் யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைக ளில் முதல் முறையாக சிறுவ னுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மருத்து வர்கள் கூறியதாவது:

தென்கிழக்கு ஆசியாவி லேயே குழந்தைகளுக்கான மிகப்பெரிய மருத்துவமனை யாக திகழும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் 40 ஆண்டுகளாக ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூட நடைபெறவில்லை. தற்போது முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும்.

சென்னை அரசு பொது மருத் துவமனை டீன் தேரணிராஜன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி, சிறுநீரக மருத்துவத் துறை மருத்துவர் பலராமன் ஆகியோரின் முழு முயற்சியால் இந்த அறுவைச் சிகிச்சை நடந் துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment