தருமபுரி, அக். 25- தருமபுரியில் திராவிட மாணவர் கழக ஆலோசனை கூட்டம் தருமபுரி பெரியார் மன் றத்தில் மாநில மாணவர் கழக துணை செயலாளர் த.மு.யாழ்திலீபன் தலைமையில், மாவட்ட திராவிடர் மாணவர் கழக தலைவர் இ.சமரசம் வரவேற்புரையாற்ற, மாவட்ட திராவிடர் கழ கத் தலைவர் வீ.சிவாஜி, மாவட்ட செயலாளர் மு. பரமசிவம், மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல் வன், நகர தலைவர்கரு.பாலன்,மாவட்ட இணைச் செயலாளர் கு.சரவணன், ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது.
மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெய ராமன் வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் அ.பிரதாப், திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர் பூபதி ராஜா, கடத்தூர் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் பெரியார், பாப்பிரெட் டிப்பட்டி ஒன்றிய மாண வர் கழக அமைப்பாளர் சாய்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கலந்து கொள்ளும் நீட் எதிர்ப்பு கருத்தரங்கில் கிராமப் பகுதியில் இருந்து அதிக மான மாணவர்களை திரட்டுவது எனவும், மாணவர்கள் சந்திப்ப தற்கு மாணவர் கழக பொறுப்பாளர்கள் கிராமங்களுக்குச் சென்று அழைத்து வர ஏற்பாடு செய்வது என்று முடிவு செய்தபடி பெண்ணாக ரம் ஏரியூர், மிட்டா ரெட்டி அல்லி, வெதரம் பட்டி, மாரவாடி, வேப் பிலைப்பட்டி, சிந்தல் பாடி, கொண்டகரஅள்ளி, சிக்கம்பட்டி, பாப்பிரெட் டிப்பட்டி, தாளநத்தம் ஆகிய பகுதிகளில் துண் டறிக்கை அளித்து, மாண வர் கழகப் பொறுப்பா ளர்கள் திராவிடர் மாண வர் கழக மாநில துணைச் த.மு.யாழ்திலீபன், மாவட்ட மாணவர் கழக தலைவர் இ. சமரசம், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அ.பிரதாப், கடத்தூர் ஒன்றிய மாண வர் கழக தலைவர் ப.பெரியார் ஆகியோர் மாண வர்களை திரட்டினர்.
No comments:
Post a Comment